தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 9 May 2025
சந்தனப்பள்ளி -முதலாம் குலோத்துங்கன் கால - சந்தனப்பள்ளி நடுகல் வீடு சொல்லும் வியப்பான செய்தி
சந்தனப்பள்ளியின் ஊரின் கிழக்கு பக்கம் ஏரியை ஒட்டிய ஒரு தனியார் நிலத்தில் ஒரு லிங்கமும் இரண்டு து◌ாண்களும் அதற்கு அருகே ஒரு நடுகல் கோவில் காணப்படுகிறது .
இந்த நடுகல் கோவிலுக்கு வெளியே ஒரு அம்மன் சிலை காணப்படுகிறது . நடுகல் கோவில் உள்ளே சிவன் கோவிலில் இருந்த தெய்வங்களின் சிலைகள் காணப்படுகின்றன . நடுகல் இரண்டுபக்கம் சிற்பங்களும் ஒரு பக்கம் குலோத்துங்கச் சோழன் கால கல்வெட்டும் காணப்படுகின்றது.
இவர் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கையில் ருத்ராட்ச மாலையுடன் காணப்படுகிறார் .
தலையை கொடுத்தான் மாதங்கள் - முதலாம் குலோத்துங்கன் கால - சந்தனப்பள்ளி நடுகல் வீடு சொல்லும் வியப்பான செய்தி
நடுகல் பரிணாமத்தில் ஒரு புதிய நடைமுறையை சொல்லும் இந்த தகவல் புத்தாண்டின் தொடக்கத்தில் வெளியிடுவதில் கிருஷ்ணகிரி அருங்காட்சியமும் & கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் பெருமை கொள்கிறது .
https://youtu.be/dRk9myAbU2I
இவர் அருகில் ஒரு பெண் காட்டப்பட்டு இருக்கிறார்கள் மறுபக்கம் குதிரையும் வெண்கொற்றக்குடையுடன் நான்கு பேர் காணப்படுகிறார்கள். ஒரு குதிரையும் காட்டப்பட்டுள்ளது.
கீழ் பகுதியில் ஊர்வலக்காட்சி உள்ளது. இவன் பேர் தலை கொடுத்த மாதங்கன் . முதலாம் குலோத்துங்கன் மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது அவன் 23 வது ஆட்சியாண்டு குறிப்பிடப்படுகிறது.
இவன் இருக்கும் கல்லின் ஒரு பக்கம் அவனுடைய மூன்று மனைவியர் குதிரை மேல் செல்வது போல் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இவர்களின் இடது கை து◌ாக்கி உள்ளது. குதிரை தலை குனிந்தவாறு செல்வது போல் காட்டப்பட்டுள்ளது . இது பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டுமானால் விஜயநகர காலத்திய பயணியின் குறிப்பை பார்க்கலாம் .தலைவன் இறந்த பின் அவனுடைய வாரிசுகளுக்கு சொத்துக்களை பிரித்தும் . யார் பகுதியை ஆள்வது போன்ற முக்கிய முடிவுகளை எடுத்தபின் குளிந்து அலங்காரத்துடன் குதிரை அல்லது யானை மீது அமர்ந்து ஊர்வலமாகச் சென்று தீயில் வீழ்ந்து கணவரிடம் செல்வார்கள் என்று குறிப்பிடுவதை ஒப்புநோக்கல் வேண்டும்.அதேப்போன்று ஊர்வலமாக செல்கின்றனர் வெண்கொற்றகுடையும் காட்டப்பட்டுள்ளது.
கல்வெட்டு மெய்கீர்த்தியுடன் தொடங்குகிறது. தலையை கொடுத்தான் மாதங்கன் என்று வருகிறது மற்றபகுதிகள் மிகவும் தேய்ந்துள்ளது.
அழிந்த கோவிலின் சிலைகள் இந்த நடுகல் வீட்டினுள் வைக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6






















No comments:
Post a Comment