Monday, 12 May 2025

நாகமலை - விடுகாதழகிய பெருமான்

பர்கூர் ஒன்றியம் நாகமலை அடிவாரத்தில் ஒரு துண்டுக்கல்லில் எழுத்துக்கள் இருப்பதாக சாப்பமுட்லுவில் கூறியதால் நாகமலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் அருகே தேடி அந்த கல்லை இழுத்து வந்து வண்டியில் ஏற்றி அரசு அருங்காட்சியகம் எடுத்துவந்தோம்.நிகழ்வில் வரலாற்று ஆசிரியர் ரவி, மதிவாணன், தமிழ்செல்வன்,நாராயணமூர்த்தி, விஜயகுமார், செல்வகுமார்,பிரகாஷ் ஓட்டுனர் ஆகயோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
: கி.பி.1199 செய்தி: மூன்றாம் குலோத்துங்கனின் 21வது ஆட்சியாண்டில் இப்பகுதியை அதிகன் விடுகாழகியபெருமாள் ஆண்டபோது திருவெண்காட்டு கோயிலில் பண்பரிளமகள் பிள்ளையாரை எழுந்தருளிவித்து செய்த தானத்தை குறிக்கிறது. கல்வெட்டு உடைந்துள்ளது.
https://youtu.be/k5m1c6BdF7w

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...