தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 13 May 2025
பனகமுட்லு வட்டெழுத்து நடுகல் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
இந்த வட்டெழுத்து நடுகல் கல்வெட்டு சாப்ரம் பஞ்சாயத்து பனகமுட்லு தொட்லன் மகன் முரளி என்பாரின் நிலத்தில் இந்த நடுகல் இருந்து அருங்காட்சியகத்துக்கு எடுதது வரப்பட்டது. இதை அருங்காட்சியத்துக்கு அளித்த முரளி என்பாருக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதன் காலம் கி.பி 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு சொல்லும் செய்தி: மேலே உள்ள தொடக்க வரிகள் இல்லாததால் முழுமையான செய்தியை அறிய இயலவில்லை. எனினும் "ஒரு வீரன் போரில் இருவரை கொன்று தானும் இறந்த" செய்தியை இந்த வட்டெழுத்து கல்வெட்டு தெரிவிக்கிறது.
8ஆம் நுாற்றாண்டு வட்டெழுத்து நடுகல் அருங்காட்சியத்தில் ஒப்படைப்பு
(பணகமுட்டலு வயலில் 7 ஆம் நுாற்றாண்டின் வட்டெழுத்துடன் கூடிய நடுகல் கண்டெடுப்பு .நில உடைமையாளர் அதை அருங்காட்சியத்துள்கு அளித்தார்.)
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பழமையும் தொன்மையும் வெளிககொணரும் வகையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் இணைந்து கிருஷ்ணகிரி ஒன்றியவளமையத்தில் பணியாற்றும் முரளி கூறியதன் அடிப்படையில்
கிருண்ஷகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் சப்பரம் பஞ்சாயத்தில் உள்ள பணகமுட்டலு கிராமத்தில் அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் நாரயணமூர்த்தி தலைமையில் ஆய்வு மேற்கொணடது . காலப்ப கவுண்டர் - தொட்லன் மகன் முரளி என்பாரின் நிலத்தில் இந்த நடுகல் 1300 ஆண்டுக்கு முற்பட்ட நிலத்தில் மண்ணில் புதைந்திருந்த வட்டெழுத்துடன் கூடிய நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இதில் ஒரு வீரன் ஒரு கையில் வாளும் மறுகையில் வில்லும் கொண்டு போரிடுவது போன்று வடிக்கப்பட்டுள்ளது. அவனுடைய மார்பின் கீழ் பகுதியில் அம்பு பட்டு இறந்துள்ளான். இப் போரில் அவன் இறந்தன் நினைவாக இக்கல் எடுக்கப்பட்டு இருக்கிறது இவனுடைய மனைவியும் இவனுடன் உடன்கட்டை ஏறி இறந்துள்ளாள் . அக்காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவியும் உடன் கட்டை ஏறும் வழக்கம் எழாம் நுாற்றாண்டில் இருந்ததற்கான சான்றாகவும் இதைக் கொள்ளலாம் .இவனுடன் மற்றோர் விரனுடைய உருவமும் காணப்படுகிறது இவனும் இப்போரில் இறந்திருக்கலாம். இந்த நடுகல் அவனது சுமார் 1300 ஆண்டுகள் பழமையான ஒரு கிபி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பழமையானது ஆகும் . இந்த மாவட்டத்தில் கிடைத்த ஒரு மிகப் பழமையான நடுகல் ஆகும்.
நடுகல்லில் உள்ளது -ஒருவன் எடுத்து பட்டான் -என்ற வரிகள் மட்டும் முழுமையாய் உள்ளன. மேல் உள்ள வரிகளில் இற்று ஐ கரே ஈல்லப்ப என்று முற்று பெறாமல் உள்ளதால் அதன் செய்தியை அறிய இயலவில்லை. மேலே உள்ள தொடக்க வரிகளும் இல்லாததால் "ஒரு வீரன் போரில் இறந்த" செய்தியை இந்த வட்டெழுத்து கல்வெட்டு தெரிவிக்கிறது எனலாம். என அருங்காட்சியக காப்பாட்சியர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் வட்டெழுத்துடன் கூடிய நடுகல் இல்லை எனவே தாங்கள் அருங்காட்சியத்துக்கு இந்த நடுகல்லை அளிக்க வேண்டும் என்று கோரிக்கக்விடுத்ததன் அடிப்படையில் உரிமையாளரான தொட்லான் என்பவர் இந்த நடுகல்லை அருங்காட்சியத்துக்கு அளித்தார் .இந்த ஆய்வுப்பணியில் தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் , நாராணமூர்த்தி , செல்வகுமார் .மதிவாணன். ரவி , கணேசன் ஆகியோருடன் பணகமுட்டலு கிராமத்தின் சிவசங்கர் , செந்தில் .முத்தமிழ் இசான் சர்மா.. சந்திரன் ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர்.
https://youtu.be/-C8alCmByAU
https://maps.app.goo.gl/XHsScE5p6e2UBXDP8
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6






No comments:
Post a Comment