தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 13 May 2025
இசை கலைஞன் நடுகல் - தற்போது அருங்காட்சியகத்தில்
தமிழகத்தில் குறைவாகவே கிடைக்கும் இசை கலைஞனின் நடுகல் இது. ஜெகதேவி ஒரு தொழிற்சாலையின் பின் பக்கம் இருந்ததை அருங்காட்சியத்துக்கு எடுததச் செல்ல கேட்டவுடன் கொடுத்துவிட்டார்கள். இன்று அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. போர்களத்தில் முரசு, சங்கு, கொம்பு, ஆகிய இசைக்கருவிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. போர்களத்தில் இந்த இசைக்கலைஞர்கள் இல்லாது போர் நடக்காது. வீரர்களுக்கு உற்சாகமுட்டுவது இவைததான். இப்படி ஒரு இசைக்கலைஞர் ஒரு கையில் வாள் ஏந்தி ஒரு கையில் தான் இசைக்கும் கொம்பை மாட்டியிருக்கிறான் அந்த பட்டியையும் தெளிவாக காட்டியிருக்கிறார்கள்.உடை அமைப்பு அணிகலன்கள் ஆகியவையும் நாம் அறிந்து கொள்ளலாம். இவன் ஒரு போர்களத்தில் இறந்திருக்கிறான். இதனால் இவன் மனைவியும் இவனுக்கு மூட்டிய தீயில் வீழ்ந்து இறந்துவிடுகிறாள் என்பதை குறிக்கும் வகையில் கையில் மதுக்குடுவையுடன் காட்டப்பட்டுள்ளாள்.எனவே இது சதிக்கல் ஆகும். இறந்த வீரனின் வீரத்தை போற்றும் வகையில் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/at4t9zllGzA
https://maps.app.goo.gl/XHsScE5p6e2UBXDP8
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6










No comments:
Post a Comment