தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 9 May 2025
மகராசகடை - பாறை ஓவியம் பனமரத்துபண்ணடா -2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள்
மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் Dr.லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அழைப்பின் பேரில் சென்ற போது இதுவரை ஆவணப்படுததாத பாறை ஓவியம் கண்டறியப்பட்டது.
ஆய்வுப்பணியில் ,கல்வெட்டு காவலன் கோவிந்த ராஜ் , அருங்காட்சியக காப்பாச்சியர் சிவக்குமார் , தமிழ்செல்வன்
https://youtu.be/4CZRlfDNMb0
கிருஷ்ணகிரி, நவ.22: கிருஷ்ணகிரி அருகே 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மகாராஜகடை அருகே, அங்க னாமலை பகுதியில் பழமையான பாறை ஓவி யங்கள் காணப்படுவதாக டாக்டர் லோகேஷ் மற்றும் கிராம மக்கள், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகு மார், ஓய்வுபெற்ற மாவட்ட அரசு அருங்காட் சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங் கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர், அங்கனாமலை அடிவாரம் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ். கூறியதாவது: கடந்த முறை இங்கு ஆய்வு செய்த போது, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. தற் போது, அதன் அருகிலேயே பனமரத்து பந்தா என்னுமிடத்தில் உள்ள பெரிய பாறையில், 3 இடங்களில் வெண்சாந்து பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 2000 ஆண் டுகளுக்கு முற்பட்டவை ஆகும். இவற்றில் ஒன்றில் குறியீடுகளும், இரண்டாவது ஓவியத் தில் 4 மனித உருவங்களும், மூன்றாவதில் மனிதர்கள் நடனமாடும் நிலையில் உள்ள பாறை ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
இந்த பாறையின் அடிப்பாகத்தில், 2,000
ஆண்டுக்கு முற்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும், இறந்தவர்களை வணங்குவதற் காக அகல் விளக்கையும் செதுக்கி வைத் துள்ளனர். இதிலிருந்து, இந்த இடம் இறந்த வர்களின் நினைவிடமாகவும், தொடர்ந்து வழிபடவே பாறையில் விளக்கை செதுக்கியும் வைத்துள்ளனர் என்று தெரிகிறது. இப்ப குதியில் அதிகளவில் பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்திட்டைகள் போன்றவை காணப்படுவதால், இந்த இடத்தை தொல் லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்
https://maps.app.goo.gl/Z2Zsc4CsSkFsBtmu8
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6


















No comments:
Post a Comment