Monday, 4 August 2025

நடுகல்- நாட்டுக்காக உயிர் துறந்த தலைவியின் நடுகல் --- உயிர் போகும் என்ற நிலையிலும் புன்னகை பூத்திருக்கும் முகம். -சின்னகொத்தூர் (குந்தாணி) - கல்வெட்டு -கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் - கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இடுப்பில் கைவைத்து ஓர் அரசி போலவே அமர்ந்திருக்கிறாள். உயிர் போகும் என்ற நிலையிலும் புன்னகை பூத்திருக்கும் முகம். எங்கேயும் இப்படி பார்க்கமுடியாது. இதன் முந்தய வடிவம் இதற்கு பின்னால் வரும் நடுகல் கல்வெட்டு. இந்த காட்சியை அப்படியே சிறிதாய் கொண்டுள்ளது. இறந்த உடன் எடுக்கப்பட்ட நடுகல் இரண்டாவதாக உள்ளது. அதன் பின் அடுத்த தலைமுறை இவளை தெய்வமாக்கி சாக்கியம்மாள் என்று வழிவாடு செய்து வந்திருக்கிறது. இந்த வழிபாடு தொடர்ந்தும் வந்துள்ளது. தியாகம் செய்து உயிர் விட்டவர்களுக்கு நடுகல் எடுப்பதும் வழிபடுவதும் வழக்கம் என்பது இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அதேப்போல இந்த நடுகல் அமைந்திருக்கும் இடமும் குந்தாணி ராஜ்யத்தின் தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் முதல் நடுகல் கல்வெட்டுடன் - இதில் 400 வருடங்களுக்கு முன்பே நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்ய விரும்பி ஒரு தலைவி மங்கை நமது தலைநகராம் தேவர்ந்தானியில் இருந்தருக்கிறார். அவர் பலியிடப்படுவதும் அதன் பின் தெய்வமாக வழிபட்டதற்கான ஆதாரங்கள் இன்னும் அங்கே காணப்படுகிறது . கல்வெட்டு வாசகம் - தீத்த மாலை உடனே தலைவெட்டு - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை எந்த ஓர் நடுகல்லிலும் தலை வெட்டு என்ற வாசகம் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/PWY4R3bxi5A
https://maps.app.goo.gl/KixnnPC1TMrU5yyC9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு
தலைவர் நாராயணமூர்த்தி 9442276076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/I8E0HtvyuSBBghu4qII9sI?mode=r_c div class="separator" style="clear: both;">
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment