தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 17 May 2025
குட்டூர் நடுகற்கள் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
பொதுவாக நடுகற்கள் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்க எடுக்கப்படுவது அந்த வகையில் ஆம்பள்ளி குட்டூர் மலையடிவாரத்தில் நான்கு நடுகற்கள் காணப்படுகின்றன. அதில் முதலாவது நடுகல் இரண்டு வீரர்கள் சண்டையிடும் காட்சி –வாள் வைத்திருப்பவன் காலான் உதைப்பது போன்றும் எதிரி அவன் வயிற்றில் வாளை செலுத்துவது காட்டப்பட்டுள்ளது. வீரன் மற்றோர் ஆயுதத்தால் தாக்கபடுவதை தடுக்கும் நிலையும் காட்டப்பட்டுள்ளது. நடுகற்களில் அந்த காலத்தில் பயன்படுத்திய ஆயுதங்களை அறியலாம் இதில் காட்டப்பட்டுள்ளது எறுழ்தடி தடிவகையைச் சேர்ந்த ஆயுதம். அதன் தலையில் இரும்புக் களிமண்ணை உருக்கி உருளையாய் வார்த்திருப்பர். அந்த உருளையின் நடுப்பகுதியில் முளைவிடும் விதையளவு இரும்பினால் ஆன மழு எம்பி இருக்கும்.
https://youtu.be/kaVTrC8dwlw
குதிரையில் அமர்ந்துள்ளவன் வீரனின் மார்பில் ஈட்டியை பாச்சுகிறான். வீரன் குதிரை வீரனை கொண்று தானும் இறக்கிறான். அதை கீழ் காட்டியிருக்கிறார்கள். நடுகல்லின் மேற்பகுதியில் இறந்த வீரன் சிவலோகம் செல்லும் காட்சியும் உடன் அவன் மனைவியும் இறந்து சிவலோகத்தில் இருக்கும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளதுு
https://youtu.be/gB-dQWksfvQ
ஒரு வில் வீரனும், கேடையம் வாள் வைத்திருப்பவனும் மோதும் காட்சி வாளால் மார்பை துளைக்கிறான் . இருவரும் இறந்து படுகிறார்கள். இறந்த இவ்வூர் வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் . கீழ்பகுதியில் நாய் ஒன்று காட்டப்பட்டுள்ளது.
https://youtu.be/bKlZ36wTRtg
ஒரு வில் வீரனும், கேடையம் வாள் வைத்திருப்பவனும் மோதும் காட்சி வாளால் மார்பை துளைக்கிறான் . இருவரும் இறந்து படுகிறார்கள். இறந்த இவ்வூர் வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்
https://maps.app.goo.gl/26jQMETGWaoUu4qC9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6







No comments:
Post a Comment