தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 13 May 2025
பைரவர் சிலைகள் கண்டெடுப்பு கீழ் பையூர் -கிருஷ்ணகிரி மாவட்டம் .
கீழ்பையூரில் உள்ள மல்லிகைத்தோட்டத்தில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருந்ததை ஆய்வின் போது தோண்டி எடுத்தோம் இரண்டு பைரவ சிலைகளும் பிற்கால சோழர்காலத்தியவை
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப் படுத்தும் குழுவினர், காவே ரிப்பட்டணம் கீழ்பையூர் அடுத்த கிராமத்தில், வரலாற்று ஆய்வுக்குழுத் தலைவர் நாராயணன் தலை மையில் ஆய்வு மேற்கொண் டனர். இதில், 700 ஆண் டுகள் பழமையான இரு பைரவர் சிலைகளை கண் டெடுத்தனர். இது குறித்து, அரசு அருங்காட்சியக காப் பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:
மூன்றாம் . குலோத் துங்கன் காலத்தில், கீழ் பையூர் மிகச்சிறப்பு வாய்ந்த ஊராக இருந்துள்ளது. ஊரின் நடுவில், சிவன் கோவில் இருந்ததற்கான அடையாளம் உள்ளது. மணிகுண்டு என்பவரின் தோட்டத்தில், இரு பைரவர் சிலைகள் கண்டெடுக்கப் பட்டன. பைரவர் என் பது சிவனடியின் அகோர வடிவம். சுடர்முடி என்று சொல்லக்கூடிய முடியானது, மேல்நோக்கி தீச் சுடல் செல்வது போல் இருவருக்கும் காட்டப்பட் டுள்ளது. கோரப்பல்லும், கண் களும் உக்கிர நிலையில்
இருக்கிறது. உடுக்கை, பிச் சைப்பாத்திரம், பாசக்கயிறு, சூலம், வாகனமாக நாய் காட் டப்பட்டுள்ளது. பைரவர் நிர் வாண நிலையில், நாகத்தை இரண்டு பக்கங்களிலும் கொண்டுள்ளார். இவர் நாக பைரவர் என, அழைக்கப் படுகிறார். இவை, 700 ஆண் டுகளுக்கு முற்பட்ட பிற்கால சோழர் அல்லது வைசாளர் கால சிவன் கோவிலை சேர்ந்த சிற்பங்களாகும். கோவிந்தராஜ், நாராயணமூர்த்தி,வரலாற்று ஆசிரியர் ரவி, வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன், ஒருங் கிணைப்பாளர் தமிழ் செல்வன், பேராசிரியை வாசுகி விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
https://youtu.be/dAR0UyAOWI8
https://maps.app.goo.gl/ZbySrHVNoN71ven2A
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6










No comments:
Post a Comment