தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Wednesday, 21 May 2025
சிலைகள் - 500 ஆண்டுகள் பழமையான விநாயகர், சப்தகன்னியர், ஐயனார்,
பிள்ளையார் அல்லது விநாயகர் இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள். இந்த விநாயகர் மட்டுமல்லாது இம் மூன்று சிலைகளும் 500 ஆண்டுகள் பழமையானது. இந்த பகுதியில் ஒரு சிவன் கோயில் இருந்து அழிந்த போது அங்கிருந்து எடுத்து இங்கு கோயில் கட்டி வழிபடுகிறார்கள்.
சப்த கன்னியர் என்பவை இந்து மதத்தில் வழிபடப்படும் ஏழு கன்னிய தெய்வங்கள் ஆகும். பிரம்மினி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி மற்றும் சாமுண்டி ஆகிய ஏழு கன்னிய தெய்வங்கள் சப்த கன்னியர் என அழைக்கப்படுகின்றனர். இத்தெய்வங்கள் அன்னை ஆதிபராசக்தியின் அம்சமாக கருதப்பட்டு வழிபடப்படுகிறார்கள்.
சப்த கன்னியர்கள்:
1. பிரம்மினி:
பிரம்மனின் சக்தியாக கருதப்படுபவள்.
2. மகேஸ்வரி:
சிவபெருமானின் சக்தியாக கருதப்படுபவள்.
3. கௌமாரி:
முருகனின் சக்தியாக கருதப்படுபவள்.
4. வைஷ்ணவி:
திருமாலின் சக்தியாக கருதப்படுபவள்.
5. வராகி:
வராகமூர்த்தியின் சக்தியாக கருதப்படுபவள்.
6. இந்திராணி:
இந்திரனின் சக்தியாக கருதப்படுபவள்.
7. சாமுண்டி:
சாமுண்டிகையின் சக்தியாக கருதப்படுபவள்.
சப்த கன்னியர் வழிபாடு, சகல நன்மைகளையும், செல்வங்களையும், ஆரோக்கியத்தையும் தருவதாக நம்பப்படுகிறது.
ஐயனார் (Ayyaṉānar) என்பவர் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் போற்றப்படும் ஒரு தமிழ் நாட்டார் தெய்வமாகும். ஐயனார் வழிபாடு கிராமப்புறத் தமிழ் மக்களிடையே பரவலாக உள்ளது. பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது.
https://maps.app.goo.gl/2SfSsbVTh1XnDXrV6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6







No comments:
Post a Comment