தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Thursday, 22 May 2025
குந்துக்கோட்டை - அதியமான் கல்வெட்டு பிற்கால கால அதியமான்கள் சோழர்களின் இறுதிக் காலத்தில் மீண்டும் செல்வாக்கு பெற்றனர். அவர்களில் முக்கியமானவர் விடுகாதழகிய பெருமாள் ஆவார். இவர் மூன்றாம் குலோத்துங்கனின் 20 ஆம் ஆட்சியாண்டு முதல் மூன்றாம் ராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டு வரை (பொ.ஆ. 1198 முதல் 1224 வரை) தகடூரை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்.
குந்துக்கோட்டை அதியமான் கல்வெட்டு
சங்க காலத்தில் சேர சோழ பாண்டியர்களை போன்றே நம் மாவட்டத்தை ஆண்ட அதியமான் வம்சமும் முக்கியமானதாகும். இவர்கள் பெரு மன்னர்களுக்கு இணையாக இருந்ததனால் மூவேந்தர்களும் இணைந்து இவர்களை எதிர்த்து போர் செய்தனர். அசோகரும் தன் கல்வெட்டில் சேர, சோழ பாண்டியர்களுக்கு இணையாக சத்யபுத்திரரான அதியமான்களைக் குறிப்பிடுகிறார். 8 ம் நூற்றாண்டு அதியமான்கள் நாமக்கல் குடைவரைகளைத் தோற்றுவித்தார்கள். பிற்கால கால அதியமான்கள் சோழர்களின் இறுதிக் காலத்தில் மீண்டும் செல்வாக்கு பெற்றனர். அவர்களில் முக்கியமானவர் விடுகாதழகிய பெருமாள் ஆவார். இவர் மூன்றாம் குலோத்துங்கனின் 20 ஆம் ஆட்சியாண்டு முதல் மூன்றாம் ராசராசனின் மூன்றாம் ஆட்சியாண்டு வரை (பொ.ஆ. 1198 முதல் 1224 வரை) தகடூரை தலைநகராகக் கொண்டு ஆண்டவர். இவரது கல்வெட்டுகள் கம்பையநல்லூர், ஆந்திர மாநிலம் லட்டிகம், திருவண்ணாமலை மாவட்டம் திருமலை ராயக்கோட்டை மலை மற்றும் அடிவாரம் மற்றும் குந்துக்கோட்டை மலையடிவாரம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. குந்துக்கோட்டை, ராயக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் பாடல் வடிவில் ஒரே மாதிரி உள்ளன. மேலும் இவற்றில் வில் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. வில் என்பது சேரர்களின் சின்னமாகும். இதனால் அதியமான்கள் சேரர்களின் கிளைக்குடியினராய் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
சேர , சோழ , பாண்டியர்களை கொண்டாடும் நாம் நம் மாவட்டத்தை ஆண்ட அதியமான் வம்சத்தை மறந்து விட்டோம் இவர்கள் பெரு மன்னர்களுக்கு இணையாக இருந்தவர்கள் இதனாலே மூவேந்தர்களும் இவர்களை எதிர்தது இணைந்து போர்செய்தனர் . அப்படிபட்ட அதியன் மரபின் கல்வெட்டு நம் #கிருஷ்ணகிரி #மாவட்டம் #தளி #குந்துகோட்டையில்
#கல்வெட்டுகள் #tamil #archeology #nadukal #kalvettu #nadukarkal #TholliyalThagalvalgal #MyTNMyHeritage #TamilNadu
#Ancient #Heritage #Photography #Art #Culture #Instagood #ArtofVisuals #Wanderlust #tamilnadutourism #krishnagiri
https://youtu.be/gmGgcqixDmU
#குலோத்துங்கதேவர் - கால கல்வெட்டு . மிகுந்த சிரமப்பட்டே படிக்க வேண்டியிருந்தது காப்பாச்சியர் படித்துவிட்டார் இருப்பினும் ஆய்வு மேற்கொள்ள இந்த வாக்கியங்கள் ஆய்வுக்கு எடுத்துக கொள்ளப்பட வேண்டும் கல்லகநாடு - ஏடுபடித்து கொடுத்து நாட்டை கெடுத்து
என்றெல்லாம் .................குந்துகோட்டை கல்வெட்டு 2
#சோழர்கள்
#முன்றாம்குலோத்துங்கதேவர் #கிருஷ்ணகிரி மாவட்ட #கல்வெட்டுகள் #தளி #குந்துகோட்டை
https://youtu.be/lqozneD0lcc
ஒரு ஊரின் பெயர் வர பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் இருந்தாலம் இந்த #குந்துக்கோட்டை ஊருக்கு அந்த ஊரில் உள்ள மலையின் தேற்றமே காரணப்பெயரானது நம் மாவட்ட நெடுங்கல் , பெரியமலை போல வாருங்கள் பார்ப்போம் . #kunthukottai
https://youtu.be/m8NrgpQg1K0
https://maps.app.goo.gl/81tpuKNmFmuMEvcS9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...









No comments:
Post a Comment