தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Sunday, 11 May 2025
தட்டக்கல் பிருந்தாவனம் - - கூத்தாண்டேஸ்வர பெருமாள் ஆனார்-தமிழகத்தின் இரண்டாவது கூத்தாண்டவர்கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் என்.தட்டக்கல் அருகே உள்ள மத்வ பிருந்தாவணம் அங்கு உள்ளவர்களால் காலங்காலமாக கூத்தாண்டேஸ்வர பெருமாள் ஆக வணங்கப்படுகிறார்..#கிருஷ்ணகிரிமாவட்டம் #மத்வ #பிருந்தாவணம் #madhvacharya #துவைதம் #brindavanam
https://youtu.be/IZsepHv96to
பிருந்தாவனம் என்பது ஒன்பது மத்வத் துறவிகளின் சமாதிகள் அமைந்துள்ள ஒரு புனிதத் தலமாகும். இது மத்வ வழி வந்தவர்களின் ஜீவ சமாதியாகும். உங்களுக்கு புரியவேண்டுமானால் ஶ்ரீராகவேந்திர் பிருந்தாவனம் மிகப்பெரிய வழிபாட்டு தலமாக இருப்பதை கொண்டு அறிந்து கொள்ளலாம். அது போலத்தான் பொம்மசமுத்திரம் பிருந்தாவனமும் இன்று வரை வழிபாட்டில் உள்ளது . இதன் காலம் 250-300 வரை இருக்கலாம் .
பல இடங்களில் மிருத்திகா பிருந்தாவனங்கள் அமைக்கப்படுகின்றன. மிருத்திகா இந்த சொல் புனித பூமி அல்லது மண்ணைக் குறிக்கிறது, இது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலிருந்து சேகரிக்கப்படுகிறது. பிருந்தாவனம் இது ஒரு கல்லறை அல்லது சன்னதியைக் குறிக்கிறது, குறிப்பாக இந்து துறவிகள் மற்றும் குருக்களின் சூழலில். குருவின் ஆன்மா பிருந்தாவனத்திற்குள் தொடர்ந்து வாழ்கிறது என்று நம்பப்படுகிறது. அந்த இடத்தில் இருந்து மண் எடுத்து வந்து மிருத்திகா பிருந்தாவனங்கள் அமைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. மிருத்திகா பிருந்தாவனங்கள் குருவின் ஆன்மீக சக்தியும் ஆசீர்வாதங்களும் தீவிரமாக இருக்கும் இடங்கள் என்று நம்பப்படுவதால் அவை மிகவும் முக்கியமானவயாக கருத்ப்பட்டு வழிபாபாடு செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தட்டக்கல்லில் இருக்கும் இந்த பிருந்தாவனம் கூத்தாண்டவர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் வழிபாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
https://maps.app.goo.gl/49aSUfFWMN3zzAD4A
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...








No comments:
Post a Comment