தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 13 May 2025
சூலதேவர் (எ) அஸ்திர தேவர் - கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம்
சூலதேவர் வழிபாடு என்பது, இந்து சமயத்தில் சிவபெருமானின் ஓர் அம்சமான அஸ்திர தேவருக்குச் செய்யப்படும் வழிபாடாகும். இது ஆலயங்களில் ஸ்ரீபலி போன்ற வழிபாடுகளின்போது சூலத்தை எடுத்துச் சென்று செய்யப்படும்,போருக்கு செல்லும் போது சூலதேவரை வழிபட்டு செல்லும் வழக்கமும் இருந்தது.ஜெய்னூர் பகுதியில் முக்கால் பாகம் மண்ணில் புதைந்து இருந்த இதை தோண்டி அருங்காட்சியத்துக்கு கொண்டு வந்தோம். இது பிற்கால சோழர் காலத்தியது ( 13 ஆம் நூற்றாண்டு )
சூலதேவரை சிவனாக வழிபடும் வழக்கமும் இப்பகுதியில் இருந்துள்ளதற்கான சான்று இதுவாகும். சிவபெருமான் தலையில் இருக்கும் சந்திரனும் சூலத்தின் தலைப்பகுதியில் காணப்படுகின்றது. அதற்கு மேல் அலங்கார தோரனமகுடமும், ஸ்வஸ்திக் குறியீடும் இரண்டு பக்கமும் சாமரமும் காட்டப்பட்டுள்ளது.
கால்பகுதியில் பூரணகும்பமும், சூலதேவரின் இரண்டு பக்கமும் குத்து விளக்கு காட்டப்பட்டுள்ளது.
https://maps.app.goo.gl/XHsScE5p6e2UBXDP8
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6










No comments:
Post a Comment