தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 20 May 2025
அபூர்வ நடுகல் குதிரைவீரன் தன் நாட்டுக்காக சுயபலி செய்து கொள்கிறான் பீமாண்டப்பள்ளி (கொல்லபள்ளி, ) மலையடிவாரம் கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் 2
இப்படி சில நடுகற்களே இருக்கும் போருக்கு முன் கொற்றவைக்கு தன்னை தானே பலிகொடுத்துக் கொள்வது ஒரு தெய்வீக செயலாகவும், நாட்டுக்காக தன்னை தானே சுயபலி கொடுப்பது கொண்டாட்ப்பட்டது. இவன் ஒரு குதிரை வீரனாக இருக்கலாம். குதிரையில அமர்ந்தவாறே தன் தலையை கொய்து கொள்கிறான். குதிரை இரு கால்களை மேல் நோக்கி வைத்துள்ளது தலையை கவிழ்ந்துள்ளது. இவன் முக்கிய தலைவன் என்பதை குறிக்கும் வகையில் அவன் பின்பக்கம் ஒருவன் குடைபிடித்துளளான்.இவனுடைய தியாகத்தை போற்றும் வகையில் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல் 400 வருடங்கள் பழமையானதான இருக்கலாம்.
குதிரை வீரன் நடுகல்லுக்கு அருகிலேயே இருக்கும் மற்றோர் நடுகல் இது ஆகும். இரண்டு வீரர்கள் பேரிட்டு கொள்கிறார்கள். அதில் இறந்த வீரனை போற்றும் வகையில் எடுக்கப்பட்ட நடுகல்.
https://maps.app.goo.gl/72Zn6yRdeAazQNMk7
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
12.640998081282083, 78.12799956140952
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6






No comments:
Post a Comment