Saturday, 17 May 2025

மாவட்டத்தன் மிகப்பெரிய திருகை (திருவை) -காலம் 17 ஆம் நூற்றாண்டு -தாரவேந்திரம் கோட்டை அருகே

திருகை 1970 க்கு முன்பு வரை வீட்டில் இருந்த ஒரு கற்கருவி என சொல்லலாம். ராகியை, கோதுமை, இவற்றினை மாவு அரைக்கவும். அதுமட்டுமல்லாமல் பயறு, உழுந்து போன்ற தானியங்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்காகவும் பயன்பட்டது. மிக்சி, கிரைன்டர் வந்த பின் இவை காணாமல் போனது. இது கருங்கல்லால் செய்யப்பட்டு இருக்கும் விட்டம் 45 செ.மீ இருக்கும். கீழ் உள்ள வட்டக்கல்லில் மையத்தில் ஒரு அச்சு இரும்பினால் இருக்கும். உயரம் அதிகமாகப்போனால் 40 செமீ இருக்கும். மேற்பகுதியும் வட்டவடிவமாகக் கீழ்ப்பகுதி போலவே இருந்தாலும், இதன் நடுப்பகுதியில் ஒரு துளை அமைந்திருக்கும் இது துளையின் அளவு, திருகையின் கீழ்ப் பாகத்தில் பொருத்திய தண்டின் விட்டத்திலும் சற்றுப் பெரிதாக இருக்கும்.ஏன் எனில் இதன் வழியாகத்தான் தானியங்கள் சென்று உடைபடும்.
கீழ்ப் பகுதியின் தண்டைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு தண்டு பொருத்தப்பட்டிருக்கும். சுற்றுவதற்கான கைபிடியாக இது பயன்படும். திருகையின் மேற்பாகத்தில் அமைந்த முன் குறிப்பிட்ட துளை மேல் அகன்றும் கீழே ஒடுங்கியும் புனல் வடிவில் அமைந்திருக்கும். திருகையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில், மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய தானியத்தைப் போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள். தானியம் சிறிது சிறிதாக இரண்டு கற்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் உடைந்த தானியம் (பருப்பு) சேகரிக்கப்படும்.
நாம் வழக்கமாக ஒரு அடி விட்டமுள்ள மாவு கையால் அரைக்கும் கல்லால் ஆன கருவியை பார்த்து இருப்போம் மாடுகள் கட்டி செக்கு இழுப்பது போல் இழுத்து மாவு அரைக்கும் தாளவேந்திரத்தில் பிரமாண்டமான 300 வருடங்களுக்கு முந்தய மாடுகள் கொண்டு மாவரைக்கும் எந்திரம்.களப்பயணத்தின் போது இதன் பழமை 700 ஆண்டுகள் ( கோட்டை அருகே இருந்த கல்வெட்டு காலத்தோடு ) கணித்தோம். பின்னர் அதில் இருந்த கன்னட கல்வெட்டினை படித்து கூறியவின் அதன் காலம் 300 ஆண்டு பழமை என்ற முடிவுக்கு வந்தோம்.Translation result 1) Nandana Sam | 2) Margashir 3) Shu 12 ೧) ನಂದನ ಸಂ | ೨) ಮಾರ್ಗಶಿರ ೩) ಶು ೧೨
https://youtu.be/UibBlzvVe40
https://youtu.be/uFxHKcJc7BI
இவை வீட்டில் பயன்படுத்துவது. ஆனால் தாரவேந்திரம் கோட்டையின் வெளியில் இருக்கும் இந்த திருகை
மாடுகளை கட்டித்தான் சுற்றமுடியும், அவ்வளவு பெரியதாகும்.
https://maps.app.goo.gl/P9GxSGaZbQPSd2yv5
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment