தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Monday, 12 May 2025
குந்தாரப்பள்ளி நடுகல் தொகுதி - 8 நடுகற்கள் கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கற்கள்
குந்தாரப்பள்ளி ஊரின் வடமேற்கு பக்கம் ஊருக்கு வெளியே உள்ள கோவிலின் முன் பக்கத்தில் நடுகற்கள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டுள்ளன. இது குறும்பர்களின் வழிபாட்டு இடமாகும். இந்த நடுகல் வீரன் ஒரு கையில் கத்தியும், ஒரு கையில் கட்டாரியும் வைத்துள்ளது போல் செதுக்கப்பட்டுள்ளான். இவன் பூசலில் இறந்ததால் இவன் மனைவி இவனுடன் உடன்கட்டை எறி உள்ளார். இது ஒரு சதிக்கல் ஆகும்.
இது இரண்டாவது நடுகல். இந்த நடுகல்லில் இருக்கும் வீரன் ஒரு கையில் வாளையும், மறு கையில் கட்டாரி என்ற ஆயுதத்தையும் வைத்துள்ளான். இவன் பூசலில் இறந்ததால் இவனுடைய இரு மனைவிரும் உடன்கட்டை ஏறி இறந்ததை இந்த நடுகல் குறிக்கிறது. இது ஒரு சதிக்கல் ஆகும்.
இது முன்றாவது நடுகல். இந்த நடுகல்லில் இருக்கும் வீரன் ஒரு கையில் வாளையும், மறு கையில் கட்டாரி என்ற ஆயுதத்தையும் வைத்துள்ளான். இவன் பூசலில் இறந்ததால் இவனுடைய மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்ததை இந்த நடுகல் குறிக்கிறது. இதில் மேற்பகுதியில் பூ ஒன்றும் காட்டப்பட்டுள்ளது. ஒரு குழந்தையும் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு சதிக்கல் ஆகும். கர்நாடக பகுதியில் குழந்தை காணப்படுவதற்கு அவர்கள் கூறும் காரணம் சதி எனும் உடன்கட்டை ஏறுதலுக்கு முன்பு குழந்தையை சீராட்டி பாராட்டி சொந்தங்களிடம் ஒப்படைப்பதை குறிப்பதாக கூறுகிறார்கள்.
இது நான்காவது நடுகல். இந்த நடுகல்லில் இருக்கும் வீரன் ஒரு கையில் வாளையும், மறு கையில் கட்டாரி என்ற ஆயுதத்தையும் வைத்துள்ளான். இவன் பூசலில் இறந்ததால் இவனுடைய மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்ததை இந்த நடுகல் குறிக்கிறது. ஒரு குழந்தையும் காட்டப்பட்டுள்ளது. இது ஒரு சதிக்கல் ஆகும். கர்நாடக பகுதியில் குழந்தை காணப்படுவதற்கு அவர்கள் கூறும் காரணம் சதி எனும் உடன்கட்டை ஏறுதலுக்கு முன்பு குழந்தையை சீராட்டி பாராட்டி சொந்தங்களிடம் ஒப்படைப்பதை குறிப்பதாக கூறுகிறார்கள்.
இது ஜந்தாவது நடுகல். இந்த நடுகல்லில் இருக்கும் வீரன் ஒரு கையில் வாளையும், மறு கையில் கட்டாரி என்ற ஆயுதத்தையும் வைத்துள்ளான். இவன் பூசலில் இறந்ததால் இவனது வீரத்தை போற்றும் வகையில் இவனுக்கு நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
இது ஆறாவது நடுகல். இந்த நடுகல்லில் இருக்கும் வீரன் ஒரு கையில் வாளையும், மறு கையில் கட்டாரி என்ற ஆயுதத்தையும் வைத்துள்ளான். இவன் பூசலில் இறந்ததால் இவனுடைய மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்ததை இந்த நடுகல் குறிக்கிறது. இது ஒரு சதிக்கல் ஆகும்.
இது ஏழாவது நடுகல் ஆகும். இது சதிக்கல்லின் உடைந்த பகுதியாக காணப்படுகின்றது.
இது எட்டாவது நடுகல் ஆகும்.பூசலில் இறந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் ஆகும்.
ஆய்வுப்பணியில் நாராணனமூர்த்தி, கோவிந்தராஜ், சதாநந்தகிருஷ்ணகுமார், வரலற்று ஆசிரியர் ரவி, தமிழசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வீரபத்திர சாமி கோவிலில் வெளிப்பக்கம் வைக்கப்பட்டுள்ளது. இவற்றின் காலம் 200 முதல் 400 வரை. இந்த பகுதி தேவர்குந்தானி ராஜ்ஜியத்தில் இருந்துள்ளதால் இந்த பகுதியில் அதிக நடுகற்கள் காணப்படுகின்றன.
https://maps.app.goo.gl/hFg15SNqiuNwUDL48
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6












No comments:
Post a Comment