தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 9 May 2025
13 ஆம் நூற்றாண்டு பூர்வாதராயர்கள் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
13 ஆம் நூற்றாண்டு பூர்வாதராயர்கள் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகின்றது . அந்த வகையில் கெலமங்கலம் வட்டாரத்தில் அமைந்துள்ள சந்தனப்பள்ளி
என்ற ஊரில் ஆய்வு மேற்கொண்டது . ஆயவுக்கு உறுதுணையாக மூர்த்தி மற்றும் சந்தனப்பள்ளி பஞ்சாயத்து அலுவலர் ராஜப்பா அவர்களும் அங்குள்ள புதர்களை சரி செய்து கொடுத்தனர் .அப்படி சரி செய்கின்ற நிலையில் காப்பாச்சியர் சிவக்குமார் அவர்கள் நடுகல் கோவிலுக்கு துணையாக வைத்து கட்டப்பட்ட ஒரு துண்டு கல்வெட்டிணை கண்டறிந்தார் அந்த கல்வெட்டு அங்கேயே படி எடுக்கப்பட்டு படிக்கப்பட்டது அது குறித்து கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ் கூறுகையில் சூளகிரி ஓசூர் கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர்களான பூர்வாதராயர்கள் பற்றிய கல்வெட்டுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றது அந்த வகையில் சந்தனப்பள்ளி ஊரில் கிடைத்த இந்த கல்வெட்டு இவர்களின் ஆட்சிப்பகுதியில் இந்த சந்தனப்பள்ளி இருந்துள்ளதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.
13 ஆம் நூற்றாண்டு பூர்வாதராயர்கள் கல்வெட்டு கண்டுபிடிப்பு.-சந்தனப்பள்ளி -கிருஷ்ணகிரி மாவட்டம்
https://youtu.be/oNHFMrBqOqg
இக்கல் வெட்டில் கூறப்பட்டுள்ள செய்தியானது.
இப்பகுதியை ஆட்சி செய்த பூர்வாதராயர் வம்சத்தை சேர்ந்த அரசர் தாமத்தாழ்வார் என்பவர் இப்பகுதியில் இருந்த இளையாழ்வார் என்பவருக்கு இரண்டு கண்டகம் விளைகின்ற நிலத்தை தானமாக அளித்த செய்தியை கூறுகிறது . இதில் குறிப்பிட்டுள்ள ‘கண்டகம்’ என்பது பழந்தமிழர் கையாணட ஒரு முகத்தல் அளவையாகும். அதாவது 4 படி கொண்டது 1 வள்ளம், 40 வள்ளம் கொண்டது 1 கண்டகம் இதன் அடிப்படையில் பார்த்தால்
320 படி விதைநெல் விளைகின்ற நிலப்பரப்பு அதாவது 100 ஏக்கர் அளவுக்கு நிலம் தானமாக அளிக்கப்பட்டுள்ளதை காணும் போது இளையாள்வார் என்பவன் படைத்தலைமை பெற்று அரசுக்கு வெற்றியை ஈட்டித்தந்திருப்பான் என்பது தெளிவாகிறது . இந்த ஆய்வுப்பணியில் காப்பாச்சியர் சிவக்குமார் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் , ஓவர்சியர் மூர்த்தி , ராஜப்பா, பாலாஜி , ஆகியோர் மேற்கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6







No comments:
Post a Comment