தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 13 May 2025
பீமான்டபள்ளி நடுகல் கல்வெட்டு -சோழமன்னன் ராஜமகேந்திரனின் இரண்டாம் ஆட்சியாண்டில் கூடுமுக்கி என்ற இடத்தில் நடைப்பெற்ற சண்டையில் நித்தவிநோத கங்கனுடனிருக்கும் அறுகரை மல்லனின் சேவகன் சோமகன் இறக்க அவனது மனைவியும் பல்லவராதித்தர் மகளுமான சோமக்கனம் தீப்பாய்ந்து இறந்த செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது.
பீமாண்டப்பள்ளி கிராமதில் இருந்து அருங்காட்சியகத்துக்கு எடுத்துவரப்பட்ட நடுகல் மற்றும் கல்வெட்டு இது கி.பி.11ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.பிற்கால சோழமன்னன் ராஜமகேந்திரனின் இரண்டாம் ஆட்சியாண்டில் கூடுமுக்கி என்ற இடத்தில் நடைப்பெற்ற சண்டையில் நித்தவிநோத கங்கனுடனிருக்கும் அறுகரை மல்லனின் சேவகன் சோமகன் இறக்க அவனது மனைவியும் பல்லவராதித்தர் மகளுமான சோமக்கனம் தீப்பாய்ந்து இறந்த செய்தியை இக்கல்வெட்டுத் தெரிவிக்கிறது. சதிக்கல்லை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீப்பாஞ்சியம்மன், தீப்பாஞ்சாள், போன்ற பெயரில் வழிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இறந்தவன் ஒரு தலைவன் என்பதை அவனடைய அணிந்துள்ள அணிகலன்களை கொண்டே அறிந்து கொள்ளலாம் அவ்விதமே அவன் மனைவியும். இருகைகளிலும் வாளேந்திய இவன் பீமாண்டபள்ளி அருகே உள்ள நெடுசாலை (கூடுமுக்கி) என்ற இடத்தில் நடைப்பெற்ற சண்டையில் இறந்ததால் அவனின் வீரத்தை போற்றும் வகையில் இந்த நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரிவரலாறுசொல்லும் – விஜயராஜேந்திர மண்டலத்து விரியூர்நாட்டு கூடுமுக்கி நடுகல் கல்வெட்டு நடந்த போரையும் உடன்கட்டை ஏறியமனைவியை தீப்பாந்தாள்எனவும் குறிப்பிடுகிறது இன்னும் கிராமங்களில் தீப்பாஞ்சால் அம்மனாக வழிபடுவதும் உண்டு
https://youtu.be/5l9ZWue6J0g
https://maps.app.goo.gl/XHsScE5p6e2UBXDP8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
1978 தமிழக்த்தில் கண்டறியப்பட்ட முதல் #பாறைஓவியம் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது #மல்லப்பாடி . இது தமிழகத்தில் பாறை ஓவியத்தேடலை அதி...







No comments:
Post a Comment