தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 17 May 2025
ஆம்பள்ளி கல்வெட்டு -காலம் 13 ஆம் நூற்றாண்டு ஆகும்.
விடுகாதழகிய பெருமாள் 13 ஆம் நூற்றாண்டில் தகடூர் நாட்டை ஆட்சி செய்தவர்
ஆழ்வான்பள்ளி என்று இக்கல்வெட்டில் குறிக்கப்படும் ஊரே தற்போதுள்ள ஆம்பள்ளியாகும். விடுகாதழகிய பெரும்பள்ளி என்ற தன் பெயரில் ஏற்படுத்திய சமணப்பள்ளிக்கு பள்ளிசந்தமாக கங்ககாமிண்டன் கட்டின ஏரி மற்றும் நிலத்தை விடுகாதழகிய பெருமாள் விட்டதை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆம்பள்ளி என்ற ஊரில் கல்வெட்டு 13 ஆம் நு◌ாற்றாண்டு கல்வெட்டாகும் விடுகாதழகிய பெருமாள் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்டது. சோழர் காலத்து ஆகும் :
1. ஸ்வஸ்தி ஶ்ரீ ராஜராஜதேவற் கேழாவது ராஜராஜ
2. அதியமானர் விடுகாதழகிய பெருமாளேனாழ்வான் பள்
3. ளியிற் கங்க காமிண்டன் கட்டின குட்டை னாற்பாலெல்லை
4. மேனோக்கிந மரமும் கீனோக்கிந கினறும் சாந்திராதித்தவரேகாக்கய
5. ன் கிறை விடுகாதழகியப் பெரும்பள்ளியாழ்வாற்கு பள்ளிச் சாந்தமா
6. க விட்டேன் ஸ்வஸ்தி ஶ்ரீ இந்த னாயனார் விடுகாழகிய பெருமாள்
விடுகாதழகிய பெருமாள் என்ற மன்னன் தன் பெயரில் சமணப்பள்ளி அமைத்து மூலவர்களை அமைத்து அதற்கு தானமாக நிலங்களை அளித்துள்ளான் என்ற செய்தி தெரிவிக்கிறது
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இதை ஆவணப்படுத்தியது. தலைவர் நாராயணமூர்த்தி காப்பாச்சியர் கோவிந்தராஜ் தொல்லியல் ஆயவாளர் சுகவனமுருகன் வரலாற்று ஆசிரியர் ரவி , விஜயகுமார் அருன் (ஊர்) உடன் தமிழ்செல்வன்
https://youtu.be/U5dzFP-qhk0
https://youtu.be/7AH6BwI4Uvw
https://maps.app.goo.gl/ryTEf5je9XafobW59
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6








No comments:
Post a Comment