Sunday, 18 May 2025

புதுப்பட்டி, (சிவம்பட்டி அருகே ) தற்போது அருங்காட்சியகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்

மிகவும் அரிதான நடுகல் சுவரோவியங்கள் கண்டுபிடிப்பு! பண்டைய தமிழர்கள் பூசலில் மாண்டவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் எழுப்பி வழிபடுவது வரலாற்று முற்பட்ட காலத்துக்கு முன்பு இருந்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடுகல் வழிபாட்டு மரபு நீண்ட வரலாற்று பின்னணி மற்றும் பண்பாட்டு தொடர்பும் கொண்டது என்பதை இங்குள்ள நடுகற்கள் சொல்கிறது . தற்போதும் கூட நடுகல் வழிபாடு பல்வேறு கிராமங்களில் நடைபெறுவதைக் காணலாம். இதுபோல பல்வேறு காலகட்டங்களில் வழிபாட்டில் இருந்த நடுகற்கள் பற்றிய ஆய்வை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் அருங்காட்சியம் இணைந்து செயல்படுத்தி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்து◌ாரை அடுத்துள்ள உள்ள சிவம்பட்டி அருகே உள்ள நடுகற்களை பள்ளத்துார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆறுமுகம் அவர்கள் மாணவர்களுக்கு நடுகற்களை காட்டும் போது சில படங்களை அனுப்பி வைத்தார் அதில் ஓவியங்கள் உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் கூறியாதன் அடிப்படையில் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் , சுகவணமுருகன் ஆகியோருடன் குழு தனது ஆய்வுப்பணியை தொடங்கியது .இந்த கண்டறிதல் நடுகல் பற்றிய புதிய பரிணாமத்தை உண்டாக்கிஉள்ளது 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று நடுகற்களை ஒரு காலகட்டத்தில் நடுகல் வீட்டினுள் மீண்டும் நட்டு வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள். இவை வெவ்வேறு காலக் கட்டத்தைச் சேர்ந்தவை. அந்த வீடு வழக்கம் போல் இல்லாமல் நான்கு பக்கமும் முடப்பட்டு கிழக்கு பக்கம் மட்டும் இரண்டு அடி வாசல் கற்திட்டை போல் வைத்துள்ளார்கள். கிழக்குபக்கமுள்ள கற்களைத்தவிற மற்ற முன்றுபக்கங்களும் காரை பூசப்பட்டுள்ளது. அதன்மேல் சுண்ணாம்பு பூசப்பட்டு செந்சாந்து வண்ணத்தில் அழகாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான ஓவியங்கள் –சில நு◌ாற்றாண்டுகளாக இயற்கையின் பிடியில் சிக்கி அழிந்து விட்டன. மீதமுள்ள ஓவியங்கள் அக்கால கலாச்சாரத்தை நமக்கு எடுத்துச் சொல்லும் ஒரு ஆவணமாக காட்சியளிக்கின்றது. இந்நடுகற்களுக்குப் பக்கவாட்டில் சுவர் போன்று அமைந்துள்ள கற்பலகைகளில்தான் அரிய சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. 2 மீ.நீளமும் 1 மீ. அகலமும் உள்ள இச்சுவரோவியத்தில் மூன்று குதிரைகளும் இரண்டு திருவிழாக்குடைகளும் பின்னல் போட்ட சடையுள்ள பெண்ணின் உருவமும் வரையப்பட்டுள்ளது. கற்பலகைகளில் சாந்து பூசி அதன் மேல் இவ்வோவியங்கள் வரையப்பட்டுள்ளன. குதிரை அய்யனாரின் குதிரை போன்று அழகுறத் தீட்டப்பட்டுள்ளன.குதிரை ஓவியம் 45×30 செ.மீ. அளவுள்ளது. இவ்வோவியங்கள் 1.5×1.2 மீட்டர் அளவிலானது. பெண் ஒருத்தியின் முகம் பின்னலிடப்பட்ட சடையுடண் தீட்டப்பட்டுள்ளது. இவ்வோவியங்களுக்கு மேலே தோரணம் போல திரைச் சீலை நீளமாக வரையப்பட்டுள்ளது. தென்பகுதியில் பூக்கள் வரையப்பட்டிருந்தமையை வண்ணத்துணுக்குகள் காட்டுகின்றன. இந்நடுகற்கள் வைக்கப்பட்ட காலத்தில் அச்சிலைகள் மேலும் சாந்து பூசப்பட்டு வண்ணத்தால் வரையப்பட்டிருந்ததற்கான அடையாளங்களும் உள்ளன. காஞ்சி கைலாசநாதர் கோவிலுள்ள சிலைகளின் மீது வரையப்பட்டுள்ளதைப் போன்று வரையப்பட்டிருந்திருக்க வேண்டும் என்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் மேலும் இவற்றைப் பாதுகாக்க பாலிவினைல் அசிடேட் என்னும் கலவைப் பூசப்பட வேண்டும் என்றார். பல்லாண்டுகளாக மழைநீர் கசிந்து வண்ணப்பூச்சுகள் உதிர ஆரம்பித்துள்ளன. இவற்றைக் காப்பாற்ற கிருஷ்ணகிரி ஆவணப்படுத்தும் குழு ஊர் மககளிடம்பேசி பாது காக்க கூறிஉள்ளது. இந்த ஆய்வில் நாரணனமுர்த்தி ,ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் . விஜயகுமார் . பிரகாஷ். ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்றனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பழமையான கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழமைவாய்ந்த கோவில்கள் பற்றி கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் 9443442991 , 9787536970 ஆகிய தொலைபேசியில் தெரிவிக்கலாம்..(2015 ல் மத்து◌ார் சென்னையன் என்பவர் இதை கண்டு அதை தன்னுடைய பி.எச்.டி பதிவில் புராண ஓவியங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார் )
https://youtu.be/sTr_1AsLTDI
வில் வீரன் நடுகல் சிவம்பட்டி நடுகற்கள் 3 சதிக்கல் வகை கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள். இவையனைத்தும் இப்போது அரசு அருங்காட்சியத்தில் உள்ளன.
https://youtu.be/7W9ic_NkB4E
https://maps.app.goo.gl/uutjTkouFVWCNLs78
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment