தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Tuesday, 13 May 2025
ஆநிரை மீட்டல் நடுகல் -கிருஷ்ணகிரி அருங்காட்சியகம் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
அக்கால மக்கள் வாழ்வில் இடையர் தொழிலும், வேளாண்மையும் மிகமுக்கிய பங்கு வகித்தமையால் நாட்டின் பொருளாதாரம் பெரும்பான்மை இவற்றைச் சார்ந்தே இருந்தது, ஆதலின் ஒரு நாட்டின் ஆ நிரைகளைக் கவருவது அந்நாட்டை பொருளாதார வகையில் தாக்குவதாகும், எனவே, ஒரு நாட்டின் மேல் போர் தொடுக்க முனைகையில் அந்நாடின் ஆ நிரைகளைக் கவருவது போரின் முதல் நடவடிக்கை. பகைவரின் ஆ நிரைகளைக் கவருவதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் வெட்சிப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. வெட்சி ஒருவகை மரமாகும், அது சிவந்த நிறமுடைய பூக்களைக் கொண்டது.
புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும். பகைவர் கவர்ந்து கொண்ட தம் ஆ நிரைகளை மீட்டுவந்து தன்னாட்டை (நாட்டின் பொருளாதாரத்தை) காப்பது அவசியமாகிறது, அதுவே கரந்தையாய் இடம்பெற்றது. கரந்தைத் திணையில் ஈடுபடுவோர், கரந்தைப் பூவை அணிவது வழக்கம். அதனாலேயே இத்திணைக்கு கரந்தைத் திணை என்று பெயர் வந்தது.
உலக அருங்காட்சியக நாள் குட்டீஸ் உலகம் அருங்காட்சியகம் ஆநிரை மீட்டல் நடுகல் - சரணி
https://youtu.be/09u3RA-DDV8
https://maps.app.goo.gl/XHsScE5p6e2UBXDP8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு
Subscribe to:
Post Comments (Atom)
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6




No comments:
Post a Comment