தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 9 May 2025
கந்திகுப்பம் நடுகல்
கந்திகுப்பத்தில் 16 ஆம் நூற்றாண்டின் நடுகல்
போரில் இறந்து படும் வீரர்களின் நினைவைப் போற்றுதல் மட்டுமன்று நடுகல் வழிவாட்டின் நோக்கம் வீரம் செரிந்த வரலாற்றனை பிற்காலத்தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் நடுகல் வழிபாடு உதவுகிறது . அப்படிப்பட்ட ஒரு நடுகல் கந்திகுப்பம் ஊரின் மையப்பகுதியில் வெங்கோபராவ் வீட்டின் அருகே உள்ள இடத்தில் ஒரு நடுகல் வீடு காணப்படுகிறது இந்த வீட்டின் அருகே உள்ள புதரில் இருந்து ஒரு காலத்தில் இது கண்டறியப்பட்டு புதர் அகற்றப்பட்டு வழிபாட்டில் உள்ளது . 4 அடி உயரமுள்ள இந்த நடுகல் கோவிலில் மேற்பகுதியில் காணப்படும் 5 குழிகள் விளக்கு ஏற்ற பயன்பட்டு இருக்கிறது. நடுகல்லில் இருக்கும் வீரன் வலது கையில் வாளும் இடது கையில் கட்டாரியும் வைத்து போரிடும் காட்சியில் செதுக்கப்பட்டுள்ளான். இந்த பகுதியில் நடந்த பூசலில் இந்த வீரன் ஈடுபட்டு
வீர மரணம் அடைந்த காரணத்தால். ஊரார் அவ்வீரனுக்கு நடுகல் எடுத்து வழிபட்டு இருக்கின்றனர் . தற்போதும் குறும்பர் இன மக்கள் மிகப்பெரிய அளவில் நடுகல் கோவில்களை அமைத்து வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது. பாளேப்பள்ளியில் இருந்து குறும்பர் இன மக்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர் என்பதை அறியமுடிகிறது . பெரும்பாலும் கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்டங்களில் நடுகல் வழிபாடு அதிகம் , அதேப்போல பெங்கலுக்கு முன்நாளில் படையலிட்டு படைக்கும் வழக்கமும் இந்த மாவட்டங்களில் காணலாம் .ஆய்வுப்பணியில் கோவிந்தராஜ் , விஜயகுமார் , பாலாஜி, தமிழ்செல்வன் ஆகியோர் ஈடுபட்டனர்.
கந்திகுப்பம் -வீரபத்திரராக வழிபட்டுவரும் 16 ஆம் நூற்றாண்டு நடுகல் கோவில் .நிலத்தை வியாபாரம் செய்யாத நில உரிமையாளர் .
https://youtu.be/wpom3hFXkrk
https://maps.app.goo.gl/nLzTi2Gh4RNYwNZ27
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
Inscription of Vijayanagar Krishnagiri Megalachinampalli விஜயநகரத்தார் கல்வெட்டு கிருஷ்ணகிரி மேகலசின்னம் பள்ளி The inscription writt...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6




No comments:
Post a Comment