தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 9 May 2025
மல்லப்பாடி - ஆஞ்சனேயர் பாறைக்கல்வெட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடியில் ராமசாமி கிருஷ்ணசாமி என்ற 14 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரு கோயில்கள் உள்ளன. இதில் பழைய ரயில் பாதைக்கு அருகே மலை அடிவாரத்தில் உள்ள ராமசாமி கோவிலின் அருகே கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் , கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. அங்கு 18 அடி உயரமுள்ள பாறை ஒன்று உள்ளது. அந்தப் பாறையில் , 8 அடி உயரத்தில் ஆஞ்சனேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் மலரையும் ஒரு கையை தலைக்கு மேல் தூக்கி அடிக்கும் பாவனையில் காட்டப்பட்டுள்ளார்.
இடுப்பில் குறுவாள் வைத்துள்ளார். அந்த பாறையில் ஆஞ்சனேயருக்கு இடது பக்கம் 7 வரிகளை கொண்ட தமிழ் கல்வெட்டு கண்டறியப்பட்டது.
இதைக் காப்பாற்றுகிறவர் இறந்தபின் வைகுந்தத்துக்கு செல்வான் - என முடியும்
மல்லப்பாடி பாறைக் கல்வெட்டு-புதிய கண்டறிதல் - இராமசாமி கோயில் அருகே-களப்பணியில் கல்வெட்டு காலவலன் கோவிந்தராஜ், பாலாஜி, தமிழ்செல்வன் , சங்கீத் (எ) யோகேஷ்ராஜ்
சென்னை பல்கலைக்கழக தொல்லியல் மாணவர் திவித்குமார் #கிருஷ்ணகிரி #மாவட்ட #கல்வெட்டுகள்
https://youtu.be/WDbGztTfHN4
என்று அடிக்கப்பட்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கல்வெட்டின்
விளக்கம்: இராயதிம்மநேயிடு என்னும் பெயர்கொண்ட இந்த அனுமாரின் உருவத்தை தேவப்பராயர் என்பவர் ஏற்படுத்தி இதில் தொடர்ந்து பூசை நடக்க தானமும் தந்துள்ளார். இதைக் காப்பாற்றுகிறவர் இறந்தபின் வைகுதத்துக்கு செல்வார் என இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகளில் வழக்கமாக இந்த தானத்தை மீறுபவார்கள்
கங்கைக்கரையில்
உள்ள பசுவை கொன்ற பாவத்திற்கு உள்ளாவான் என்று தான் முடியும் ஆனால் இக்கல்வெட்டில் மட்டும்தான்
இதை காப்பவன்
சொர்க்கலோகத்துக்கு செல்வான் என குறிப்பிடப்பட்டுள்ளது . ஆய்வுப் பணியில் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ் செல்வன், பாலாஜி, மல்லப்பாடி சங்கீத் மற்றும் தொல்லியல் மாணவர் திவித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6


















No comments:
Post a Comment