தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 9 May 2025
நலகுண்டலப்பள்ளி பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜாகடை அருகே நாரலப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நலகுண்டலப்பள்ளி கிராமத்தில் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாச்சியர் மற்றும் மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப் போது, அங்கிருந்த பாறை ஓவியங்களை ஆய்வுசெய்தபோது, ஒரே பாறையில் 3 காலங்களில் வரையப்பட்ட ஓவியங்கள் இருப்பது தெரியவந்தது.
கூரைப்பரப்பில் அலங்கரிக்கப் பட்ட சாய்ந்த பாண்டில் விளக்கு, ஆரத்துடன் கூடிய இரு சக்கரங்கள் சதுரம், நான்கு இதழ் பூக்கோலம் இரண்டு மற்றும் இரண்டு வரிசைகளில் தலா மூன்று 'ப' வடிவக் குறியீடுகள் வரையப்பட்டு அவற்றைச் சுற்றி புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக தமிழகத்தில் பாறை ஓவியங்களை வரையப் பயன்படுத்தப்பட்ட வண்ணம் மற்றும் அவை வெளிப்படுத்தும் கருத்து ஆகியவற்றைக் கொண்டு எந்த காலத்தைச் சேர்ந்த ஓவியம் என்பது தெரியவரும். செஞ்சாந்து ஓவியம் புதிய கற்காலத்தையும், வெண்சாந்து பெருங்கற்படைக் காலம் மற்றும் வரலாற்றுக் காலத்தை சேர்ந்தவையாகும். மேல் உள்ளது வெண்சாந்தில் வரையப்பட்ட மனித உருவமாகும்
அதற்கு அருகே வரையப்பட்டுள்ள மனித உருவம் வரையப்பட்டுள்ளது இது செஞ்சாந்து ஓவியமாகும் இது 4500 வருடங்கள் பழமையானது ஆகும் .
பாண்டில் விளக்கு, ஆரத்துடன் கூடிய இரு சக்கரங்கள் சதுரம், நான்கு இதழ் பூக்கோலம் இரண்டு மற்றும் இரண்டு வரிசைகளில் தலா மூன்று 'ப' வடிவக் குறியீடுகள் வரையப்பட்டு அவற்றைச் சுற்றி புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளன. இது வரலாற்றுக் கால மக்களின் வாழ்வியலைக் குறிக்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆய்வின்போது, நலகுண்டலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன், பாலாஜி, குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பாறை ஓவியம் கண்டுபிடிப்பு - கிருஷ்ணகிரி மாவட்டம் நாரலப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள நலகுண்டலப்பள்ளி மலை அடிவாரத்தில் நலகுண்டலப்பள்ளி அன்பழகன் கண்டறிந்த பாறை ஓவியம் -
https://youtu.be/T61g7N0Sbok
https://maps.app.goo.gl/YjEEDhHd9mmTAhfeA
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6














No comments:
Post a Comment