தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Friday, 9 May 2025
சூரன்குட்டை - நடுகல் கி.பி 1048 ராஜாதி ராஜன் சோழன் காலத்தில் தலையை வெட்டிக் (தலை பலி )கொண்டான் கங்கமாதங்கன் ஏன்
பாலேப்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சூரன்குட்டை நடுகல்
இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இதே போல் கல்வெட்டுடன் காட்டப்பட்டுள்ளது.மல்லிகார்சுனதுர்க்கம், சின்னகொத்து◌ார் இந்த இடங்களில் தலைபலி கொடுத்தவர்கள் நடுகல் கல்வெட்டுடன் இருக்கும் . மற்றோர் இடத்தில் இதேப்போல் ஒரு நடுகல் செய்து வழிபடுவார்கள் . அதேப்போலத்தான் சூரன்குட்டை நடுகல்லும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலநடுகல் கல்வெட்டுடன் காத்தாடி குப்பத்தில் உள்ளது இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. தலைவன் பத்மாசனத்தில் அமர்ந்து யோகநிலையில் அமர்ந்துள்ளான்.
இவனுக்கு அருகில் இவனுடைய மனைவி காட்டப்பட்டு இருக்கிறார். இவன் சிவ பக்தன் என்பதால் சிவலிங்கம் காட்டப்பட்டுள்ளது.
இவன் தலைவன் என்பதை குறிப்பிடும் படி அருகே ஒரு குதிரையும், குடை அல்லது சின்னங்களை ஏந்தி இருவரும் , சாமரம் வீசும் ஒரு பெண் காட்டப்பட்டுள்ளாள்
அடிப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ள ஊர்வலக்காட்சியில் முதலில் இருவர் காவடி எடுத்து வருகிறார்கள், அதற்கடுத்து இருவர் பல்லக்கு எடுத்தும் வருகிறார்கள் அதற்கு முன்னர் மிருதங்கம் வாசித்துக் கொண்டு இருவரும்,அதற்கும் முன்னதாக நாதஸ்வரம் வாசித்தவாறு இருவரும் காட்டப்பட்டு உள்ளார்கள்
கி.பி 1048 ராஜாதி ராஜன் சோழன் காலத்தில் தலையை வெட்டிக் (தலை பலி )கொண்டான் கங்கமாதங்கன் ஏன் ? கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றயம் பாலேப்பள்ளி ஊராட்சி சூரன் கொட்டாய்யில் - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள்
https://youtu.be/mgRV2UZ3orE
Subscribe to:
Post Comments (Atom)
தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்
இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6






No comments:
Post a Comment