Saturday, 14 June 2025

பெரியமுத்தூர் வீரபத்திரர் கோயில் நடுகற்கள் Periyamuthur Hero stones - கிருஷ்ணகிரி மாவட்ட நடுகற்கள் -கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

பூசலில் இறந்த ஒரு வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் - இது சதிக்கல் ஆகும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வீரபத்திரர் கோயில்கள் மற்றும் அந்த கோயில்களில் நடுகல் தொகுதியும் காணப்படும். இவைகள் பெரும்பாலும் குறும்பர் இனத்தவரால் குலதெய்வமாக வழிபடப்படுகின்றது. ஒரு குடும்பம் மற்றும் ஓர் இனக்குழுவினர் வணங்கும் ஒரு தெய்வம் ஆகும். பொதுவாக, குலதெய்வ வழிபாடு என்பது அவ் இனக்குழுவின் தொன்றுதொட்ட பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. குறும்பர் என்ற இனக்குழுவினர் தமிழகத்தின் உள்ள பழங்குடி இனக்குழு ஆவர். இவர்கள் தங்களை வீரபத்திரரின் வழி வந்தவர்களாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக இராயர் குல குறும்பர் இனக்குழுவில், வீரபத்திரர் குல சாமியாக வணங்கப்படுகிறார். வீரபத்திரர் சிவபெருமானின் அம்சமாகக் ஒரு கருதப்படுகிறார், மேலும் குறும்பர் இனக்குழுவினர் இறந்த தங்கள் முன்னோர்களின் ஆன்மா வீரபத்திரரை சென்று அடைவதாக கூறுகின்றனர்
பெரியமுத்துர் - வீரபத்திரர் கோயில் நடுகற்கள்
https://youtu.be/fhq2XGM-30c
இது ஒரு புலிக்குத்திப்பட்டான் கல் இரு வீரர்கள் புலியோடு போராடி இறந்துள்ளனர். அதில் ஒருவரின் மனைவி உடன்கட்டை ஏறி இறந்துள்ளாள்
இது ஒரு புலிக்குத்திப்பட்டான் கல்
பொதுவாக கோயில்களில் காணப்படும் நடுகற்கள் அந்த கோயிலை கட்டியவருகோ, கோயிலுக்கு நிலதானம் அளித்தவர்களுக்கும், கோயிலுக்கு தொடர்ந்து திருப்பணிகள் செய்தவர்களுக்கும், எடுக்கப்படுவது உண்டு. அப்படிப்பட்ட ஒரு நடுகல் இது. ஏன் என்றால் இந்த நடுகல்லில் உள்ளவர்கள் வணங்கியபடி காட்டப்பட்டுள்ளது.
இது சதிக்கல்
Map
https://maps.app.goo.gl/zRqQvPEwDdeLTy5r7
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வரலாற்று ஆசிரியர் ரவி 8122341228 வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...