Wednesday 2 October 2019

67. Bigest Menhir பிரமாண்டமான குத்துக்கல் சாமந்தமலை -MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால அரியவகை குத்துக்கல் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவும் கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும் இணைந்து  குந்தாரப்பள்ளியை அருகே உள்ள  சாமந்தமலை கிராமத்திற்கு மேற்கில் பாரதகோவில் எதிர்புரமுள்ள ராஜாமணி என்பவருக்கு சொந்தமான வேடங்கொல்லை என்ற வயலில் உள்ள 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால அரியவகை குத்துக்கல்லை கண்டு ஆய்வு செய்தனர். இது குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: குத்துக்கல் என்பது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக்கால மக்கள் இறந்தவர்களுக்காக எழுப்பும் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். பொதுவாக குத்துக்கல் என்பது 2 அடி அகலமும் 12 முதல் 15 அடி உயரமும் அடி பெருத்து நுனி சிறுத்த செங்குத்துதுக்கல்லாக இருக்கும். 2000 year old Bigest Menhir  study in Krishnagiri District Museum and the Krishnagiri District Museum in 2000 They found and studied. Museum archivist Govindaraj said: Kuttukal is one of the monuments for the dead of the Iron Age people of 2000 years ago. Generally piercing is a small vertical stone, 2 feet wide and 12 to 15 feet high.

 பெரிய பலகை கல் போன்றும் இவ்வகை குத்துக்கல் இருப்பதை மஹாராஜகடை மல்லசந்தரம், தேவனூர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவ்வகையான பலகைக்கல் பெண் அல்லது பறவை உருவ அமைப்பில் உள்ளதை மோட்டூர், உடையார்நத்தம் ஆகிய இடங்களில் காணலாம். சாமந்தமலையில் உள்ள குத்துக்கல் சுமார் ஒன்பதரை அடி அகலமும் பதினோரு அடி உயரமும் ஒரு அடி கனமும் உள்ள கற்பலகையாகும்.   இதற்கு மேற்கு பக்கமாக 250மீட்டர் தொலைவில் இதேபோன்ற கல் பாதி உடைந்து காணப்படுகின்றது.







2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால அரியவகை குத்துக்கல் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவும் கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாற்றை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு இடங்களில் கள ஆய்வினை மேற்கொண்டுவருகிறது.இன்று தலைவர் நாராயணமூர்த்தி , தொல்லியல் ஆய்வாளர் சுகவணமுருகன் மற்றும் குழுவினர்  இன்று குந்தாரப்பள்ளியை அருகே உள்ள  சாமந்தமலை கிராமத்திற்கு மேற்கில் பாரதகோவில் எதிர்புரமுள்ள ராஜாமணி என்பவருக்கு சொந்தமான வேடங்கொல்லை என்ற வயலில் உள்ள 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால அரியவகை குத்துக்கல்லை கண்டு ஆய்வு செய்தனர். இது குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: குத்துக்கல் என்பது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்புக்கால மக்கள் இறந்தவர்களுக்காக எழுப்பும் நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். பொதுவாக குத்துக்கல் என்பது 2 அடி அகலமும் 12 முதல் 15 அடி உயரமும் அடி பெருத்து நுனி சிறுத்த செங்குத்துதுக்கல்லாக இருக்கும். பெரிய பலகை கல் போன்றும் இவ்வகை குத்துக்கல் இருப்பதை மஹாராஜகடை மல்லசந்தரம், தேவனூர் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவ்வகையான பலகைக்கல் பெண் அல்லது பறவை உருவ அமைப்பில் உள்ளதை மோட்டூர், உடையார்நத்தம் ஆகிய இடங்களில் காணலாம். சாமந்தமலையில் உள்ள குத்துக்கல் சுமார் ஒன்பதரை அடி அகலமும் பதினோரு அடி உயரமும் ஒரு அடி கனமும் உள்ள கற்பலகையாகும்.   இதற்கு மேற்கு பக்கமாக 250மீட்டர் தொலைவில் இதேபோன்ற கல் பாதி உடைந்து காணப்படுகின்றது. இதுப்போன்ற கற்பலகைகள் தமிழகத்தில் ஒரு சிலவே உள்ளன. இந்த கற்பல்கையையும் உருவமுள்ள விசிரிப்பாறையாக செய்ய முயற்சி செய்துள்ளதை காணமுடிகிறது. தமிழகத்தில் காணப்படும் பெருங்கற்படைக்கால சின்னங்களின் வகைப்பாடுகள் அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த குத்துக்கல் கண்டறியப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வில்.  ரவி , என்றிபவுல்ராஜ், டேவீஸ் விஜயகுமார் ,. சரவணகுமார் ராமச்சந்திரன் கணேசன் ,தமிழ்செல்வன் மனோகரன், ஊரில் உள்ள சின்னப்பன்   ஆகியோர் இந்த ஆய்வுல் ஈடுபட்டனர்.