Tuesday, 10 June 2025

வாமன கோட்டுருவம் -வைணவ கோவில்களுக்கு நிலங்களை தானமாக அளிக்கும் போது அந்த நிலத்தின் எல்லையில் வாமன அவதாராரம் பொறிக்கப்படும்.காத்துச்சுகனாப்பள்ளி, தமிழ் நாடு

வைணவ கோவில்களுக்கு நிலங்களை தானமாக அளிக்கும் போது அந்த நிலத்தின் எல்லையில் வாமன அவதாராரம் பொறிக்கப்படும். அப்படி ஒரு வாமனரின் கோட்டுருவம் பொன்மலைகுட்டை பெருமாள் கோவிலுக்கு ஒரு கிலோமிட்டருக்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ளது . பொன்மலைகுட்டை கோவிலின் தானத்தின் எல்லையாக இது இருக்க வாய்ப்புண்டு
https://youtu.be/UVdZi2o_NYA
வாமன அவதாரம் என்பது வைணவர்கள் முழுமுதற் கடவுளாகக் கருதும் விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். இவர் உபேந்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
மகாபலி சக்கரவர்த்தி தீவிர விஷ்ணு பக்தன். ஆயினும் அவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்த திட்டமிட்டான். அதனை முறியடிக்க விஷ்ணு மூன்றடி வாமன உருவத்துடன், யாக சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் கேட்டார். மிகுந்த செருக்குடன் இருந்த மாபலி தர சம்மதம் தந்தான். பகவான் திரிவிக்கிரமன் வடிவு எடுத்து வானை ஒரு காலாலும், மண்ணுலகை ஒரு காலாலும் அளக்க, மூன்றாமடியை அவனது தலையில் வைத்து அவனது அகந்தையை ஒழித்தார்
https://maps.app.goo.gl/FUE6LD115mmn6mhh6 Map
https://maps.app.goo.gl/zDWuv4iZ5kJFR2uJA
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...