Saturday, 14 June 2025

கிருஷ்ணகிரி காலபைரவர் கோயில் நடுகற்கள் -krishnagiri kalabairavar temple krishnagiri hero stones -கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

பொதுவாக பூசலில் இறந்த வீரனுக்கும், கொடிய விலங்குகளிடம் இருந்து தன் இனத்தையும் , கால்நடைகளையும் காக்கும் கோது இறந்த வீரனுக்கும் அவனுடைய வீரத்தையும் , தியாகத்தையும் போற்றும் வகையில நடுகல் எடுத்து வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது இன்றும் நடுகல் வழிபாடு இருக்கின்றது. கிருஷ்ணகிரி அருகே உள்ள காலபைரவர் கோயிலின் மேற்கு பக்கம். கிழக்கு நோக்கியவாறு நான்கு நடுகற்கள் காணப்படுகின்றன.
கோயிலின் பழமையை கூறும் நடுகற்கள் - ஸ்ரீ காலபைரவர் கோயில் ஸ்தல புராணம் -#Kalabiravr-MUSEUMநன்றி -திருமதி ஹேமலதா ராக்கேஷ் அவர்கள் -ஊடகவியலாளர் கிருஷ்ணகிரி கல்லகுறுக்கி காலபைரவர் கோவில் தலபுராணம் (வரலாறு)
https://youtu.be/utszpQCnbo0
பொதுவாக கோயில்களில் காணப்படும் நடுகற்கள் அந்த கோயிலை கட்டியவருகோ, கோயிலுக்கு நிலதானம் அளித்தவர்களுக்கும், கோயிலுக்கு தொடர்ந்து திருப்பணிகள் செய்தவர்களுக்கும், எடுக்கப்படுவது உண்டு. அப்படி எடுக்கப்பட்ட நடுகற்களே முதல் மூன்று நடுகற்களும் , இவை மூன்றும் அந்த தலைவர்கள் இறந்தபின் எடுக்கப்பட்ட சதிக்கற்கள் ஆகும். இவற்றின் காலம் 500 முதல் 250 வரை மூன்று காலக்கட்டங்களை சார்ந்தவை . நான்காவது நடுகள் பூசலில் இறந்து போன வீரனுக்கு எடுககப்பட்டது.
இந்த கோயிலின் அருகே உள்ள பெரிய ஏரியின் கிழக்கு பக்கம் பூசாரிப்பட்டியில் உள்ள பாறைக்கல்வெட்டு கி.பி.1533 ஆண்டு வெட்டப்பட்டது விஜயநகர மன்னர் அச்சுததேவராயர் காலத்தில் (தற்போதும் பிரபலமாய் உள்ள) பைரவர் கோயில் நைவேத்தியம் மற்றும் திருவிளக்கேற்றவும் காட்டிநாயக்கன் பட்டியை (காட்ணாம்பட்டி) தானமாக வழங்கிய செய்தியை கூறுகிறது. அப்படி தானம் கொடுத்தவர்களின் நடுகல்லாக இவை இருக்க கூடும் .இதற்கும் இந்த நடுகற்களுக்கும் உள்ள தொடர்பை இதன் மூலம் அறியலாம்
Map
https://maps.app.goo.gl/mrGvqQWf5pK3sWvV8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வரலாற்று ஆசிரியர் ரவி 8122341228 வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment

மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்

மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவை...