Wednesday 11 December 2019

73.முன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டெடுப்பு MUSEUM &KHRDT. HISTORY OF KRISHNAGIRI

`புறநானூறு கூறுவது வெட்சிப் பூவை சூடி கள்வர் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இது நடுகற்களில் தொறுக் (தொழு) கொள்ளுதல் என அழைக்கப்படுகிறது. அதே நேரம் கரந்தைப் பூ சூடி பகைநாட்டுக் கள்வர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை தமது இடத்துக்கு மறவர் மீட்டு வருவர்கள். இவ்வாறான தொறுப் பூசலில் இருபக்கமும் மறவர்கள் மாள்வர்.போரில் வீழ்ந்துபட்ட மறவர்களுக்கு நடப்பட்ட நடுகற்கள் அவர்கள் வீழ்ந்த ஊர்களிலேயே நடுப்படுவது உண்டு. அப்படிப்பட்ட நடுகல் தான் இது இதில் வீரனின் இடதுபுறம் மேற்பகுதியில் இரு தேவமங்கயர் வீரனை சொர்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் கீழ் பகுதியில் ஆநிரையை மீட்கும் தொறு பூசலை குறிக்கும் வகையில்  மாடு, ஆடு மான் ஆகிய வளர்ப்பு விலங்குகள் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

 கிருஷ்ணகிரி வரலாற்றினை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் அவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது . அதன் ஒருபகுதியாக குட்டூரைச் சேர்ந்த அருண் அவர்கள் கொடுத்த தகவலின் படி பர்கூர் ஒன்றியம் குண்டலப்பள்ளி கிராமத்தில்  நாராயணமூர்த்தி தலைமையிலான குழு ஆய்வினை மேற்கொண்டது . வரலாற்று ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் மற்றும் அருங்காட்சியக காப்பாச்சியர் கூறும் போது இவ்விடத்தில்  மூன்று நடுகற்கள் காணப்படுகின்றது  மூன்றிலும் எழுத்துக்கள் இருந்தன. 
 இவற்றில் இரண்டு நடுகற்கள் 900 ஆண்டுகளுக்கு முந்தயன அதாவது 11 ஆம் நுாற்றாண்டு காலத்தவை  என அருங்காட்சியக காப்பாச்சியர் தெரிவித்தார். முதலாவது நடுகல்லில் ஒரு வீரன் அம்பு எய்வது போல் செதுக்கப்பட்டுள்ளது. அந்த வீரனின் உடலில் எட்டு இடங்களில் அம்பு பாய்ந்து உள்ளது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. 
அந்த கல்வெட்டு முதலாம் குலோத்துங்கச் சோழன் 33 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் அதாவது 1103 ஆண்டு தொறு மீட்கும் பூசலில் இறந்து வீரனுக்காக எடுக்கப்பட்டது . 
முதலாம் குலோத்துங்க சோழன் . இவர் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார். என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காலத்தில் இப்பகுதி சோழர் ஆட்சியின் கீழ் உள்ளதை நாம் இதிலிருந்து அறியலாம்.
ஊர் காமிண்டர் மகன் கலிஞ்சிறை தம்மசெட்டி காவல் காப்பதில் வல்லவன். இவன் காலாந்தகமங்கலம் என்ற இடத்தில் தொறு பூசலில் கால்நடைகளை மீட்பதற்காக நடந்த சண்டையில் இறந்தான் என்ற செய்தியை இதிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
 கலிஞ்சிறை கடுமையான காவல் இருந்து இறந்தான் என கங்காவரம் கல்வெட்டும் (தொ.எண் 86/1973) கூறுகிறது.





 
புலிக்குத்திப்பட்டான் கல் ஒன்று தெலுங்கு மொழி கல்வெட்டுடன் காணப்படுகின்றது. கால்நடைகளைக் காக்க புலியுடன் போரிட்டு இறந்த வீரனுக்காக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது.இதுவும் 900 ஆண்டுகள் பழமையானதான இருக்கலாம்

 மூன்றாவது கல்வெட்டும் தொறுமீட்டல் பற்றியதாகும்

 இதுமட்டுமல்லாமல் இவ்விடத்தில் நிலத்தில் 11 ஆம் நுாற்றாண்டு காலத்தைசேர்ந்த லிங்கமும் , நந்தி சிலையும் கிடைக்கப்பெற்று கோவில் வழிபாட்டில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சோழர்காலத்தில் அமைக்கப்பட்ட கிணறு ஒன்று உள்ளது . வட்டமாக கட்ட அதற்கேற்றவாறு அதனுடைய செங்கல் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணியில் சதாநந்த கிருஷ்ணகுமார். டேவீஸ் , கணேசன், சரவணகுமார் ராமச்சந்திரன், அருண் ஒருங்கிணைப்பாளர் . தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.













எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI


Sunday 1 December 2019

72.2500 Years old கற்குவை-நலகுண்டலப்பள்ளி MUSEUM &KHRDT. HISTORY OF KRISHNAGIRI






அந்த இடத்தை 3 கிமி உடன் வந்து காட்டிய அன்பழகன் மற்றும் மகராசகடை பள்ளி மாணவர் திவாகர் அவர்களுக்கு நன்றி
சிதைப்பப்பட்ட கல்திட்டை
 கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வரலாறு, வாழ்வியல் ஆகியவற்றை கண்டறிந்து ஆவணப்படுத்தவும் வெளி உலகிற்கு தெரியபடுத்தவும் ஜே.எஸ்.ஆர் கல்வி அறக்கட்டளை, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மற்றும் கிருஷ்ணகிரி  அருங்காட்சியகம். இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நாராயணமூர்த்தி தலைமையில் நலகுண்டலப்பள்ளி என்ற ஊருக்கு கள ஆய்வுக்கு சென்றபோது நலகுண்டலப்பள்ளியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அன்பழகன் மற்றும் பள்ளிமாணவர் திவாகர் ஆகியோர் அருகே உள்ள மலையுச்சியில்  (பந்தல் பாறை) வித்யாசமாக கற்களைக் கொண்டு ஏதோ அமைத்துள்ளார்கள் என்று கூறினார் அந்த இடத்தை குழு 3 கி.மீ தொலைவு நடந்து சென்று ஆய்வுசெய்த பின்பு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில் அவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களின்  வாழ்வியல் முறைகளை விளக்கும் பெருங்கற்கால நினைவு சின்னங்கலென உறுதி படுத்தினார்.
பெருங்கற்கால கற்குவை வட்டவடிவில் இரண்டும்,   சதுரவடிவில் இரண்டும் எண்கோணவடிவில் ஒன்றும் காணப்படுகிறது. வட்டவடிவ கற்குவை ஆறு அடி உயரமும் பத்து அடி சுற்றளவும் கொண்டதாக காணப்படுகிறது. அக்காலத்தில் இறந்தவர்கள் நினைவாக அமைக்கப்படும் பல்வேறு வகையான நினைவு கட்டமைப்புகளில் கற்குவையும் ஒன்று. கற்களை உடைக்க இப்போதுள்ளது போன்ற கருவிகள் இல்லாத காலத்தில் கிடைத்த மற்றும் உடைந்த கற்களைக் கொண்டு சரியான அளவில் சதுர வடிவிலும் . எண்கோணவடிவிலும் (எட்டுபட்ட). வட்டவடிவிலும் சிறப்பான முறையில் அமைத்துள்ளனர். இது போன்ற கற்குவைகள் பாலகுறி அருகே உள்ள மலைகளிலும் சிதைந்த நிலையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. எனகூறினார்
ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கூறுகையில் இவை பெரும்பாலும் மலையின் உச்சிப்பகுதியில் அமைக்கப்படுகின்றன. பெருங்கற்கால காலகட்டத்தில் கற்களைக் கொண்டு இறந்தவர்களுக்கான நினைவுச்சின்னங்களை அமைப்பது வழக்கம் அதுபோன்ற கற்குவைத்தான் இது. சில ஒழுங்கற்ற வகையில் கற்களை குவியலாக குவிக்கும் முறையும் உண்டு ஆனால் இவ்விடத்தில் ஒழுங்கான கட்டமைப்பு காணப்படுகிறது. எற்காடு மலைப்பகுதிகளிலும் காணப்படுகின்றன . மலைவாழ் மக்கள் இவற்றினை ஒருகாலத்தில் குறிப்பிட்ட நாட்களில் வழிபட்டு வந்ததாகவும் செவிவழி செய்திகள் கூறப்படுகின்றன. இந்த களப்பயனத்தில் ரவி,மதிவாணன்  விஜயகுமார் , கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்
ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ் ஆருப்பள்ளி மலையில் குத்துக் கல்லுடன் கூடிய கற்குவையை கண்டறிந்துள்ளார். இன்றும் கற்குவை ஏற்படுத்தும் பழக்கம் சில பழங்குடியினரிடையே காணப்படுகிறது.

சதுரவடிவ கல்திட்டை








எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.

71. ஒய்சாள வம்சமானது முடிவுற்ற பின்னும் தொடர்ந்து குறுநிலத்தலைவர்களாக இருந்தார்கள் -பந்திகுறி கல்வெட்டு MUSEUM &KHRDT. HISTORY OF KRISHNAGIRI


கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆவணபடுத்தும் குழுவும் கிருஷ்ணகிரி மாவட்ட அருங்கட்சியகமும் இணைந்து தொடர்ந்து பல்வேறு இடங்களை கள ஆய்வு செய்துவருகிறது. வரலாற்று ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் அளித்த தகவலின் பேரில் அண்மையில் பந்திகுறி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டை கண்டறிந்து வாசிக்கப்பட்டது.இக்கல்வெட்டு குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: பந்திகுறிக்கு மேற்கு தனியார் நிலத்தில் உள்ள பாறையில் 10 வரிகளைக்கொண்ட இந்த நீண்ட கல்வெட்டு காணப்படுகிறது. வீரவல்லாளனின் மகன் விருதுகோவன் இலக்குமி நாயக்கர் இப்பகுதியை ஆண்டபோது அவரது ஆட்சி சிறக்கவேண்டி குந்தாணியில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்கு பந்திகுறியில் உள்ள நிலத்தை தானமாக அளித்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு இரண்டு முக்கிய வரலாற்று செய்திகளை நமக்கு தெரிவிக்கிறது. முதலாவதாக சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பந்திகுறி என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் பன்றிகுறுக்கி என்று அழைக்கப்பட்டதாக இக்கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.மேலும் ஒய்சாள மன்னன் வீரவல்லாளனின் பெயர் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் வீரவல்லாளன் கி.பி.1343ல் கொல்லப்பட்டதாகவும் அதன்பின் அவனது மகன் மூன்று ஆண்டுகள் அரசாண்டதாகவும் வரலாறு கூறுகிறது. அவனுக்குப் பின் விஜயநகர அரசோடு இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கி.பி.1368ம் ஆண்டை சேர்ந்த பன்றிகுறி கல்வெட்டு வீரவல்லாளனின் மகன் பெயர் விருதுகோவன் இலக்குமிநாயக்கர் என்றும் இவனது வாளும் தோளும் நன்றாக இருக்கவேண்டி தானம் அளித்த செய்தியை குறிப்பிடுகிறது. எனவே இக்கல்வெட்டு வாயிலாக ஒய்சாள வம்சமானது முடிவுற்ற பின்னும் தொடர்ந்து குறுநிலத்தலைவர்களாக விஜயநகரர் ஆட்சிக்காலத்திலும் இப்பகுதியை ஆண்டுவந்துள்ளது தெரியவருகிறது. மேலும் வீரவல்லாளன் என்ற பெயரில் சுமார் 150 ஆண்டுகள் கழித்து விஜயநகரப் பேரரசின் இறுதிக் காலத்தில் இப்பகுதியை ஆண்டதாக முறையே கிபி.1505ம் ஆண்டை சேர்ந்த நெடுசால் கல்வெட்டு மற்றும் 1511ல் வெட்டப்பட்ட கொத்தூர் கல்வெட்டு ஆகிய இரண்டு கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. எனவே  இது குறித்து மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.











நம்மோட கண்டறிதல் விக்கிபிடியாவில்


youtube link -https://www.youtube.com/watch?v=wjAW5scb4ig


எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.