Friday, 11 July 2025

ஜெகதேவி பெருமாள் கோயில் 300-400 ஆண்டுகளுக்கு இடைபட்ட காலத்தை சேர்ந்தது.-கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

ஒரு காலத்தில் ஜெகுதேவியின் மிக அழகான மலைகோயிலாக இருந்திருக்கும். இன்றளவும் இதை சரி செய்தால் மிக அழகான கோயில் உருவாக்கலாம். அங்கே கண்டிப்பாக கடவுள் வருவார் அருள்வார்
ஜெகதேவராயர் என்பவர் பாராமகால் பகுதியை ஆண்ட ஒரு தெலுங்கு மரபினர் ஆவர். இவர்கள் விஜயநகரப் பேரரசின் கீழ், 1578 முதல் 1669 வரை, ஏறத்தாழ 91 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஜெகதேவராயர்கள், பாராமகால் பகுதியில் உள்ள பன்னிரண்டு கோட்டைகளில் ஒன்றான ஜெகதேவி கோட்டையை ஆட்சி செய்தனர். இவர்கள் ஆட்சியின் கடைசி காலத்தில் இந்த கோயில் கட்டப்பட்ட இருகலாம். ஜெகுதேவியில் இருக்கும் பழமையான கோயிலாகும்.
கோபுரத்தின் ஒரு பக்கத்தில் சிதைந்த சுதை சிற்பம் மட்டும் இன்றும் உள்ளது.
கட்டிடம் கருங்கல் கோபுரம் செங்கல் மற்றும் காரையால் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயில் பெருமாள் கோயில் என உறுதி செய்வத இந்த சிற்பங்கள் தான் . கைகளில் சங்கு சக்கரங்களை கொண்டுள்ளன
இந்த கோயில் செல்லும் நாம் ஒர் பெரிய குளத்தை கடந்து தான் செல்ல வேண்டும், கோயில்களுக்கு அருகே குளங்களை கட்டுவது அப்போதய மரபு .குளம் 120 அடி பக்க அளவு கொண்டதாகும்.
https://maps.app.goo.gl/L85izNnpjZTUhWqu9
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு தலைவர் நாராயனமூர்த்தி 9448876076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வரலாற்று ஆசிரியர் ரவி 8122341228வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு @KHRDT

No comments:

Post a Comment