Wednesday 27 June 2018

35. HISTORY OF KRISHNAGIRI-சைவ -வைணவ தானபத்திரங்கள் -old Donate bonds for temples

உங்களுக்கு தெரியுமா-  200-250 ஆண்டுகள் பழமையான வைனவ  தானப்பத்திரம். 200-250 years  old land bonds for lord permal temples .
The 2 feet tall vamanan statue is set . in the north and the moon the sun in the south side The shape of the line is similar to the one that contains the kamadalam and the thalampu umbrella. The lunar sun in the two sides is that this donation will go on. Perumalappan Temple in the west of Kallu and Perumal temple in Kavalapatti Perumal in the eastern part of which there is no mention of which land is given to the temple .
2 அடி உயரத்துக்கு  வாமன உருவம் அமைக்கப்பட்டுள்ளது அதன் வடக்கு பகுதியில் சந்திரனும் தெற்கு பகுதியில் சூரியனும் உள்ளது . ஒருகையில் கமன்டலமும் ஒருகையில் தாளம்பூ குடையும் வைத்திருப்பது போல்  கோட்டு உருவம் அமைந்துள்ளது . இதன் இருபகுதியில் சந்திர சூரியன் இருப்பது அவை உள்ளவரை இந்த தானம் செல்லும் என்பதாகும் . கல்லுக்கு மேற்கே காட்டு பெருமாளப்பன் கோவிலும் கிழக்கு பகுதியில் கனவாப்பட்டி பெருமாள் கோவிலும் உள்ளது இதில் எந்த கோவிலுக்கு எந்த நிலம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் இல்லை -இந்த தானத்துக்கு ஏன் வாமன உருவம் வரையப்பட்டுள்ளது.
இது முன்பே கண்டரியப்பட்டாலும் ஆவணப்படுத்த நான் விமல் என் மாணவன் பூவரசு ஆகியோர் அந்த இடத்துக்கு சென்றோம்



 காலைக்கதிர் மூர்த்தி அவர்களின் திறமையான புகைப்படப்பணி
அமைவிடம் கிருஷ்ணகிரி பக்கத்தில உள்ள அக்ரகாரம் கிராமத்தின் பாண்டுரங்கன் ஆலையத்தின் மேற்கு பகுதியில் 1 கிலோ மீட்டர் செல்லவேண்டும்


300 years ago a soldier donated the land to the temple. There is a sculpture in the lower part of the temple and the knife is on the two sides. Curater  Govindaraj and Sugavanamurugan also said the same.
300 ஆண்டுகளுக்கு முன் ஓர்வீரன் இந்த கோவிலுக்கு நிலத்தை தானமாக கொடுத்ததற்கான. அடையாளம் நடுவில் சூலமும் இரண்டு புறங்களில் சூரியன் சந்திரன் இவை இருக்கும் வரை இந்த நிலங்கள் கோவிலுக்கு சொந்தம் என்பதை குறிப்பதாகும் இதற்கு கீழ்பகுதியில் கத்தி செதுக்கப்பட்டுள்ளது.இது அவன் குறுநில மன்னனாகவோ போர் வீரனாகவோ இருந்திருக்க கூடும் என காப்பாச்சியாளர் கோவிந்தராஜ் கூறினார் . ஆய்வாளர் சுகவனமுருகனும் இதே கருத்தை தெரிவித்தார்.

அதை உறுதி செய்யும் வகையில்  கோவில் வளாகத்தில் ஓர் போர் வீரனுடைய நடுகல் உள்ளது. 

காப்பாச்சியர் திரு கோவிந்தராஜ் ஆய்வு செய்கிறார் 
காலைக்கதிர் பத்திரிகையாளர் திரு மூர்த்தி அவர்கள் படம் எடுக்கிறார்

 கள ஆய்வுப்பணியில் ஆய்வுப்பணியில்டேவீஸ் . விஜயகுமார் .விமல் ,ரவி. காவேரி. ஶ்ரீராமன் ,ஆதி  தமிழ்செல்வன் ஆகியோர் ஈடுபட்டனர் அனைவருக்கும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.








இது 23.06.2018 அன்று கிருஷ்ணகிரி காலபைரவர் கோவில் அருகே உள்ள மலையில் தேடுதல் பணியை மேற்கொண்டோம். மலையில் பாறை ஓவியங்கள் கிடைக்கவில்லை என்று வரும் பாதையில் ஆதி ஒன்றை காட்டினார் .அதை படம்  எடுத்து வந்து காட்டியதில் பெறப்பட்ட தகவல்கள்  அனைவருக்கும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment