Saturday 30 September 2023

தேவர்முக்குளம் வணிகக்கல்வெட்டு- #கிருஷ்ணகிரிமாவட்டம் #கிருஷ்ணகிரி #khrdt #history #musiem #அரசுஅருங்காட்சியகம் #தொல்லியல்துறை #பள்ளிக்கல்வித்துறை #கிருஷ்ணகிரிவரலாற்றுஆய்வுமற்றும்ஆவணப்படுததும்குழு #Excavation #கல்வெட்டுகள் #கிருஷ்ணகிரிமாவட்டகல்வெட்டுகள்

தேவர் முக்குளத்தில் பிரகாஷ் அந்த கற்குவியலை ஆராய்ந்த போது 1926ல் மத்திய தொல்லியல் துறையால் குறிப்பிடப்பட்ட துண்டு கல்வெட்டு உண்மையில் முழு கல்வெட்டு என்று 97 வருடங்கள் கழித்து தெரியவந்திருக்கிறது . அதை சுத்தம் செய்வது சிரமமாகத்தான் இருந்தது. உடன் காப்பாச்சியர் கோவிந்தராஜ் ,சதாநந்தகிருஷ்ணகுமார், நாராயணமூர்த்தி, பிரகாஷ், எம்.என் ரவி . தமிழ்செல்வன் https://youtu.be/Vm1qV1xOYzQ
ஓர் புதிய கண்டறிதல் -தேவர்முக்குளம் வணிகத்தளமாக இருந்ததையும் அங்கு பல்வேறு வணிகக் குழுக்கள் இருந்து அவர்கள் தங்கள் பாதுகாப்புக்கென வீரர் படைகளை வைத்திருந்ததையும் அவ்வீரர்கள் தங்குவதற்கான வீரப்பட்டணம் இருந்ததையும் அறிகிறோம். அண்மையில் ஐகுந்தத்திலும் இத்தகைய வணிகக்குழுக்கள் இணைந்து வீரத்தாவளம் உருவாக்கிய செய்தியைக் கூறும் .............. https://youtu.be/3xog53ryXs8
தேவர்முக்குளம் வணிகக்குழு கல்வெட்டு முதல் பக்கம் 1.ஸ்வஸ்திஸ்ரீ ராகஜந்திர 2.சோழதேவற்கு யாண்டு பதி 3. நெட்டாவதிற் 4. ஸ்வஸ்திஸ்ரீ தேவதேவன் த்ரி 5...வாணி அமரகன்யாச்சிதந் 6. வந்த தந்மோத புஜ 8..ணநாதந ஸ்பஷ்ட நிர்ம்மித மஹாராசாதி 9. மர்த்தந ஸகலபராஸ்ஸர் 10. .ரிய சாமுண்டேஸ்வரி 12. வீரஸாஸந மஹா 13. புவந வீரர்க. மஹா 14. வீர ஸ்ரீவி.புத..தி 15. ஐநூற்றுவரும் இ 16. வர்மக்களாந ஸ்ரீநா. 17. வீரபுத்ரரோம் மாப்பந் புளியுமநை 18. க் கொன்ற பணிய்மக்கள் மண்டலங் 19. காக்கும் கண்டழியும் மண்டலங்கா 20. க்கும் கவறை செட்டியையும் ஐஞ் 21. நூற்றுவந்....

No comments:

Post a Comment