Tuesday 11 April 2023

பெரும்பாலை நடுகல் கல்வெட்டு

& பெரும்பாலை, பூவாலை நடுகல் கல்வெட்டு தருமபுரி மாவட்டம், தமிழ்நாடு
செ.கோவிந்தராஜ், காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி, சீ. பரந்தாமன், தொல்லியல் அலுவலர்,ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் சரவணகுமார் . திருச்செல்வன் , கிருஷ்ணகிரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இடம்: தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம், பெரும்பாலை, பூவாலை சிவன் கோயிலருகே உள்ள நடுகல் கல்வெட்டு. காலம்: மூன்றாம் வீரவல்லாளனின் ஆட்சிக்காலம். ஆண்டு தமிழ் யுவ ஆண்டுக்கு இணையான பொ.ஆ.1335. செய்தி: போசள மன்னன் மூன்றாம் வல்லாளனின் ஆட்சியின்போது இப்பகுதியை ஆண்ட செம்பொன் தியாகப்பெருமாள் தமக்காக தண்டியத்தேவர் என்பவர் பவழந்தூரில் புதுப்படை ஒன்றை உருவாக்கிக்கொண்டிருந்தபோது. குறுப்பு நாட்டு விசையமங்கலத்தை சேர்ந்த செங்குன்றன் மகன் சோழங்கதேவர் இரண்டு குதிரைகளை கைப்பற்றும் சண்டையில் எதிரியை வெட்டி தானும் இறந்துவிட்டார். கைப்பற்றிய இரண்டு குதிரைகளையும் செம்பொன் தியாகப்பெருமாளிடம் இவருடைய தம்பி ஒப்படைத்தார் இதற்காக சோமங்க தேவரின் வம்சத்தவருக்கு கணியாட்சியாக பெரும்பாலையில் உள்ள பூவாலை என்னும் ஊரை தானமாக வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இன்னும் பெரும்பாலை என்ற ஊரும் பூவாலை என்ற பகுதியும் வழக்கத்தில் உள்ளன. இக்கல்வெட்டினை விளக்கும் வகையில் இரண்டு நடுகற்களும் இங்கு உள்ளன. ஒரு நடுகல்லில் வீரன் எதிரியைக் கொன்று அவன்மீது நிற்பது போலவும், மற்றொரு நடுகல்லில் வீரன் மற்றும் இரண்டு குதிரைகளும் காட்டப்பட்டுள்ளன. 1. ஸ்வஸ்திஸ்ரீ வீரவல்லாள தேவர் ப்ரிதிவி இரா 2. ச்சியம் பண்ணியருளா நின்ற யு(வ) ஸம்வத்ஸ 3. ரத்து சித்திரை மாஸத்து (அத)பூர்வபக்ஷத்து 4. சதுர்தி திங்கட்கிழமை பெற்ற நாள் (சிமிளில்)கண் 5. டர் ஹனுமன் செம்பொந் தியாகப்பெருமாள் பவ 6. ழந்தூரில் இருக்கையில் தண்டியதேவர் பவழ 7. ந்தூரிலே புதுபடையாக்குகையில் தம்முடைய 8. முகத்தில் தந்திரிமாரையழைத்து வெட்(ட)டினவர் 9. களுக்கு ஊர்களுங்குடுத்து வேண்டும் வரிசைக்கு 10. க்குடுக்கக்கடவேனாகவும் என்று குறுப்பு நாட்டில் வி 11. சையன் மங்கலத்து முடக்கோழி வேட்டுவரில் செங் 12. குன்றந் மகன் சோழங்க தேவர் வெட்டி இரண்டு 13. குதிரையும் பிடித்துக் களத்திலே தாமும் படுகையி 14. ல் தம்முடைய தம்பி செம்பொன் தியாகப்பெருமாள் 15. திருமுன்பே குதிரையிரண்டு மொப்பித்து குடுத்த 16. வளவில் சொன்னமை பாஷைக்குத் தப்புவராயர் கண் 17. டர் கண்டர் ஹனுமன் வேடரை வஞ்சி நாட்டில் வா 18. ள கைகாட்டும் பெரும்பால பூவாலங்காணியாட்சி 19. யாகக் குடுத்தேன் மகவை மத்த தமது களிறு காராள 20 ர் சூரியன் கட்டுக்கு தப்பை சிங்காரம் மலை கலங் 21. கிலு மனங்கலங்காத கண்டன் சோழங்கத் 22. தேவனுக் குடுத்தோம் இக்காணியாட்சிக்கு அல்லல் 23. பேசினார் உண்டாகில் கங்கைமாக் கரையிலே ப்ராஹ்ம 24. ணனை வதஞ் செய்தான் பாவம் குரால் பசுவை 25. கொன்றான் பாவம் புகக்கடவார்களாகவும் இக்கா 26. ணியாட்சி குடுத்தவனை தே.
.நன்றி சின்னுகவுண்டர் மற்றும் ரஞ்சிதம். பெரும்பாலை செம்மனூர் #தருமபுரிி #தருமபுரிமாவட்டம் பெரும்பாலை #பூப்பாலை #செம்மனூர் #நிலதானம் #கல்வெட்டு #செம்மனூர் #நடுகல் #குதிரை . காணொலி https://youtu.be/R_6S01NUASo QR code நன்றி தங்கள் எங்காவது கல்வெட்டுகளை பார்த்தால் அதை 9787536970 என்ற எண்ணுக்கு வாட்சப்பில் அனுப்பவும் நன்றி

No comments:

Post a Comment