Wednesday 11 December 2019

73.முன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டெடுப்பு MUSEUM &KHRDT. HISTORY OF KRISHNAGIRI

`புறநானூறு கூறுவது வெட்சிப் பூவை சூடி கள்வர் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். இது நடுகற்களில் தொறுக் (தொழு) கொள்ளுதல் என அழைக்கப்படுகிறது. அதே நேரம் கரந்தைப் பூ சூடி பகைநாட்டுக் கள்வர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை தமது இடத்துக்கு மறவர் மீட்டு வருவர்கள். இவ்வாறான தொறுப் பூசலில் இருபக்கமும் மறவர்கள் மாள்வர்.போரில் வீழ்ந்துபட்ட மறவர்களுக்கு நடப்பட்ட நடுகற்கள் அவர்கள் வீழ்ந்த ஊர்களிலேயே நடுப்படுவது உண்டு. அப்படிப்பட்ட நடுகல் தான் இது இதில் வீரனின் இடதுபுறம் மேற்பகுதியில் இரு தேவமங்கயர் வீரனை சொர்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் கீழ் பகுதியில் ஆநிரையை மீட்கும் தொறு பூசலை குறிக்கும் வகையில்  மாடு, ஆடு மான் ஆகிய வளர்ப்பு விலங்குகள் தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

 கிருஷ்ணகிரி வரலாற்றினை மறுகட்டமைப்பு செய்யும் வகையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் அவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது . அதன் ஒருபகுதியாக குட்டூரைச் சேர்ந்த அருண் அவர்கள் கொடுத்த தகவலின் படி பர்கூர் ஒன்றியம் குண்டலப்பள்ளி கிராமத்தில்  நாராயணமூர்த்தி தலைமையிலான குழு ஆய்வினை மேற்கொண்டது . வரலாற்று ஆய்வாளர் சதாநந்த கிருஷ்ணகுமார் மற்றும் அருங்காட்சியக காப்பாச்சியர் கூறும் போது இவ்விடத்தில்  மூன்று நடுகற்கள் காணப்படுகின்றது  மூன்றிலும் எழுத்துக்கள் இருந்தன. 
 இவற்றில் இரண்டு நடுகற்கள் 900 ஆண்டுகளுக்கு முந்தயன அதாவது 11 ஆம் நுாற்றாண்டு காலத்தவை  என அருங்காட்சியக காப்பாச்சியர் தெரிவித்தார். முதலாவது நடுகல்லில் ஒரு வீரன் அம்பு எய்வது போல் செதுக்கப்பட்டுள்ளது. அந்த வீரனின் உடலில் எட்டு இடங்களில் அம்பு பாய்ந்து உள்ளது தெளிவாக காட்டப்பட்டுள்ளது. 
அந்த கல்வெட்டு முதலாம் குலோத்துங்கச் சோழன் 33 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் அதாவது 1103 ஆண்டு தொறு மீட்கும் பூசலில் இறந்து வீரனுக்காக எடுக்கப்பட்டது . 
முதலாம் குலோத்துங்க சோழன் . இவர் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டார். என்பது குறிப்பிடத்தக்கது. அவர் காலத்தில் இப்பகுதி சோழர் ஆட்சியின் கீழ் உள்ளதை நாம் இதிலிருந்து அறியலாம்.
ஊர் காமிண்டர் மகன் கலிஞ்சிறை தம்மசெட்டி காவல் காப்பதில் வல்லவன். இவன் காலாந்தகமங்கலம் என்ற இடத்தில் தொறு பூசலில் கால்நடைகளை மீட்பதற்காக நடந்த சண்டையில் இறந்தான் என்ற செய்தியை இதிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
 கலிஞ்சிறை கடுமையான காவல் இருந்து இறந்தான் என கங்காவரம் கல்வெட்டும் (தொ.எண் 86/1973) கூறுகிறது.





 
புலிக்குத்திப்பட்டான் கல் ஒன்று தெலுங்கு மொழி கல்வெட்டுடன் காணப்படுகின்றது. கால்நடைகளைக் காக்க புலியுடன் போரிட்டு இறந்த வீரனுக்காக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது.இதுவும் 900 ஆண்டுகள் பழமையானதான இருக்கலாம்

 மூன்றாவது கல்வெட்டும் தொறுமீட்டல் பற்றியதாகும்

 இதுமட்டுமல்லாமல் இவ்விடத்தில் நிலத்தில் 11 ஆம் நுாற்றாண்டு காலத்தைசேர்ந்த லிங்கமும் , நந்தி சிலையும் கிடைக்கப்பெற்று கோவில் வழிபாட்டில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சோழர்காலத்தில் அமைக்கப்பட்ட கிணறு ஒன்று உள்ளது . வட்டமாக கட்ட அதற்கேற்றவாறு அதனுடைய செங்கல் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணியில் சதாநந்த கிருஷ்ணகுமார். டேவீஸ் , கணேசன், சரவணகுமார் ராமச்சந்திரன், அருண் ஒருங்கிணைப்பாளர் . தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.













எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI


No comments:

Post a Comment