Saturday 2 November 2019

69..DISCOVERED BIGEST PETROGLYPH IN TAMIL NADU தமிழகத்தின் மிகப்பெரிய பாறைக்கீரல் ஓவியம் கண்டுபிடிப்பு SADANANDAM WITH MUSEUM &KHRDT.

SADANANDAM KRISHNAKUMAR DISCOVERED BIGEST PETROGLYPH   IN TAMIL NADU WITH  MUSEUM &KHRDT -AND -MLA-P.MURUGAN -FOUND BIG ROCKART தமிழகத்தின் பெரிய பாறைக்கீரல் ஒவியம் சதாநந்த கிருஷ்ணகுமார் அவர்களால் கண்டறியப்பட்டது. உடன் மதிப்பு மிகு சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் மற்றும் அருங்காட்சியகம் ,கிருஷ்ணகிரி வராலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

The Krishnagiri Museum and KHRDT are working together to inform the history of the Krishnagiri district to the world. Vepanapalli legislator Murugan came to us with the interest of learning about the history of his constituency.
கிருஷ்ணகிரி மாவட்ட  வரலாற்றை உலகிற்கு தெரிவிக்கும் வகையிலான பணிகளை கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து செய்து வருகிறது . இன்று நடைபெற்ற கள ஆய்வுக்கு தன்னுடைய சட்டமன்றதொகுதியின் வரலாற்றினை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன்  எங்களுடன் வந்திருந்தார் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் அவர்கள்.

Sadanandakrishnakumar and Saravanakumar who have been in search of history for 15 years. And took her to the scratch. Archaeological evidence supports us to trace the history of prehistoric man. The rock paintings and rock sculptures are the best archaeological evidence to know about the great period of human history. Museum archivist Govindaraj says that the Nakanayana Banda is a place that is 2km away from the hill near the village of Konkanapally. There, the rainwater is flowing like a creek.

 15 வருடமாக வரலாற்று தேடலில் ஈடுபட்டுள்ள சதாநந்தகிருஷ்ணகுமார் மற்றும் சரவணகுமார். ஆகியோரும் கீறல் உள்ள இடத்துக்கு அழைத்துச்சென்றனர்.  வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் வரலாற்றை எடுத்துக் கூறுவதற்கு தொல்லியல் சான்றுகளே நமக்கு  துணைபுரிகின்றன. அந்த வகையில்  மனித குல வரலாற்றில் பெருங்கற்படைக் காலத்தைப் பற்றி அறிந்துக்கொள்ள பாறை ஓவியங்களும் பாறை கீறல்களும் சிறந்த  தொல்லியல் சான்றாக விளங்குகின்றன.  இது பற்றி அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறுகையில் வேப்பனப்பள்ளி ஒன்றியம் கொங்கனப்பள்ளி கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் 2 கி மீ தொலைவு வனப்பகுதியில் நடந்து சென்றால் நக்கநாயன பண்டா என்ற இடம் உள்ளது. அங்கே மழை நீர் சிற்றோடை போல் பலகாலமாக ஓடிகொண்டிருக்கிறது.
 இயற்கை அழகு சூழ்ந்த இவ்விடத்தில் உள்ள மூன்று பாறைகளில் பாறை கீறல்களும் நான்காவது பாறையில் வெண்சாந்து மற்றும் செஞ்சாந்து ஓவியமும் காணப்படுகின்றன. 
6 feet hight 
Rock paintings and rock scratches are two important art forms of prehistoric people. The first rock painting in Tamil Nadu is currently being discovered in Krishnagiri district
பாறை ஓவியங்களும் பாறை கீறல்களும் வரலாற்றுக்கு முற்பட்ட கால மக்களின் முக்கியமான இரு கலை வடிவங்களாகும். தமிழகத்தின் முதல் பாறை ஓவியம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது போல தற்போது .




For the first time in the Krishnagiri district, there are three large granites of about 6 feet tall, of which only 6 feet tall. The period of this great rock incision can be determined as the Oceanic Period, as the rock paintings and sculptures of the period are found 50 feet away from the rock. In these days, the images are painted with a single line. But this inserted image has been scratched to a lesser depth by a double line.


For the first time in the Krishnagiri district, there are three large granites of about 6 feet tall, of which only 6 feet tall. The period of this great rock incision can be determined as the Oceanic Period, as the rock paintings and sculptures of the period are found 50 feet away from the rock. In these days, the images are painted with a single line. But this inserted image has been scratched to a lesser depth by a double line.
Each of these may be a form of the 6-foot-tall mother goddess. The body structure of both sides is like a scissor. The two refreshments are drawn on either side of the deity. Head and neck are two separate circles. The body is painted in a scissor-like structure. The image of the third rock is similar to the one found there. Krishnagiri district is not only the largest rock cliff in Tamil Nadu. The field study was led by Narayanamurthy, the researcher was Sadananthakrishnakumar and the historian Ravi. Mativanan. Davies. Prakash. Vijayakumar Saravanakumar. Babu, former councilor K.S. Khalil, Sathasivam

தமிழகத்தின் மிகப்பெரிய சுமார் 6 அடி உயரமுள்ள ஒரே விடிவிலான 3 பாறை கீரல்களும் முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இக்கீறல் பாறையிலிருந்து 50 அடி தொலைவிலேயே பெருங்கற்படைக் காலத்தை சேர்ந்த பாறை ஓவியங்களும் கற்திட்டையும் காணப்படுவதால் இப் பெரிய பாறைக் கீறலின் காலத்தையும் பெருங்கற்படைக்காலம் என தீர்மானிக்கலாம். இக்கால ஒவியங்களில் உருவங்கள் ஒற்றை கோட்டால் வரையப்பட்டிருக்கும். ஆனால் இக்கீறல் உருவமோ இரட்டை கோட்டால் முழு உருவமாகவே குறைந்த ஆழத்தில் கீறப்பட்டுள்ளது. 
இவை ஒவ்வொன்றும் 6 அடி உயரத்தில் உள்ள தாய் தெய்வத்தின் வடிவமாக இருக்கலாம். இரு புறம் சடையும் உடலின் அமைப்பு கத்திரிபோலவும் உள்ளது. தெய்வத்தின் இரு புறமும் இரு சிற்றுருவங்கள் வரையபப்பட்டுள்ளது .இவை பிற்காலத்தில் வரையப்பட்டவை என அதன் அமைப்பினை வைத்து சொல்லலாம்.  தலையும் கழுத்தும் தனித்த இரு வட்டங்கள் இணைந்தது போலவும். உடல் அமைப்பு கத்திரிக் கோல் போன்ற அமைப்பிலும் வரையப்பட்டுள்ளது. மூன்றாவது பாறையில் உள்ள உருவம் இவை போன்றே இருந்தாலும் அது மிகவும் தேய்ந்து காணப்படுகிறது.  கிருஷ்ணகிரி  மாவட்டம் மட்டுமல்லாது இதுவே தமிழகத்தில் இதுவரை அறியப்பட்ட பாறைக்கீரல்களில் பெரியதாகவும் இருக்க கூடும். இந்த கள ஆய்வு தலைவர் நாராயனமூர்த்தி தலைமையில் ஆய்வாளர் சதாநந்தகிருஷ்ணகுமார், வரலாற்று ஆசிரியர்  ரவி. மதிவாணன். டேவீஸ் . பிரகாஷ். விஜயகுமார் சரவணகுமார் . தமிழ்ச்செல்வன் சிகரமானபள்ளி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பாபு, முன்னாள் கவுன்சிலர் K.S.கலீல், சதாசிவம் ஆகியோர் ஈடுபட்டனர்

 இவற்றினை அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் விளக்கினார்.Tamil Nadu govt Museum curator Govindaraj explained all



எங்கள் பத்திரிக்கை நண்பர்கள்





இப்படிக்கு கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு.

https://youtu.be/NGcyeAtwC9A    -LINK


தலைவர் நாராயணமூர்த்தி -  9442276076
செயலர் டேவீஸ்                              -9787116799
தமிழ்செல்வன் (இ.செயலர்) -   9787536970
விஜயகுமார்  பொருளர்          -    9488830969



VEPANAPALLI - KRISHNAGIRI DIST -TAMIL NADU .INDIA


No comments:

Post a Comment