Monday 8 July 2019

13. ஆம்


பேசாளமன்னன் இராமநாதன் காலத்தில் விடுகாதழகிய பெருமாள் என்ற அதியன் மரவுச்சிற்றரசன் வழங்கிய ஆணை . மருராந்தக வீரநுளம்பனின் பையூர் முதலான பற்றுகளின் மன்றாட்டு உரிமை சந்ததி இல்லா  வாரிசுகளுக்கு தொடர்வது பற்றிய குறிப்பு இது.



1.ஸ்வஸதி ஶ்ரீ இராமநாத தேவர்க்கு 

2.யாண்டு இருபத்தி இரண்டாவது மதுராந்தக வீர நுளம

3. பன் வா..த்தரேன் பையுர் முதலாக நமக்குச்

4.சென்ற பற்று ..நம்மிட மக்கள் மக்கள் மன்றடியார் மக்கள்

5.ம ..லுள்ளதனையும் சந்ததியில்லா அடைமை கொள்ள..

6.தல்ல விடுகாத அழகிய பெருமாள் ஆணை.








ஒவ்வொரு ஊருக்கும் ஊரவை ஒன்றும் இருந்தது. ஊரவையின் உறுப்பினர் ஊராளி என்றழைக்கப்பட்டார். மன்றாடிகள் என்போர் இருந்துள்ளனர். மன்றுக்குரியவர் மன்றாடி. (கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலில், பதிப்பாசிரியர்கள் மன்றாடி என்பதற்குத் தரும் விளக்கம்:  மன்றாட்டு, மன்றாட்டுக் காணி, மன்றாட்டுப்பேறு ஆகியன கால்நடை வளர்ப்புச் சமூகத்திலிருந்து வந்த ஊர் வருவாயிலிருந்து உருவாக்கப்பட்ட பங்கு முறையாகும். கால்நடை வளர்ப்புச் சமூகத்தோடு தொடர்புடைய மன்றம் என்ற சொல்லிலிருந்து மன்றாட்டு வந்தது. மன்றாட்டை நிருவகிப்பவன் மன்றாடி எனப்பெற்றான்.)

https://youtu.be/0PJzKPgH8vE

No comments:

Post a Comment