Tuesday 9 April 2019

59- HERO STONE PANAGAMUTULU- பணகமுட்டலு நடுகற்கள் 1 KHRDT HISTORY OF KRISHNAGIRI

பனகமுட்லுன் பெயர்  500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல்
1. வண்ணக்கமுட்டலி லூரழியலி
2. ல் பட்ட காமிண்டர் கோவிந்
3. தாண்டை ஆந்தையந் அடியா
4. ன் பணிக்கமாராயன் மகன் படலன்
5. தாமய தண்ணாக்கன் படையை கெடு
6. த்திக் குத்தினதுக்கு உருபம் அடிப்பித்தா
7. ந் கோவிந்தாண்டை காணிகாத்தாண்
8. நட்டா
9. ன்.

பனகமுட்லுன் பெயர்  500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல்
கிருஷ்ணகிரி மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும் இப்பகுதியில் அதிக அளவிலான நடுகற்கள் காணப்படுகின்றன. இவற்றில் கல்வெட்டுக்களுடன் இருக்கும் நடுகற்கள் அப்பகுதியின் பெயர் மற்றும் போர் யார் யாருக்கும் முன்டது போன்ற முக்கிய தகவல்களை கொண்டதாக இருக்கும் இதன் மூலம் அக்கலாத்திய வரலாற்றினை அறிந்து கொள்ள முடிகிறது. இந்த வரலாற்றினை வெளி உலகிற்கு கொண்டு வரும் முயற்சியை கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு எடுத்துள்ளது அதனடிப்படையில்
கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாச்சியர் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்  சுகவணமுருகன் , ஆய்வுக்குழுவின் தலைவர் நராயணமூர்த்தி செயலர் டேவீஸ் ஆகியோர் எற்பாடு செய்திருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் சாப்பரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பனகமுட்லு என்ற கிராமத்தில் அரசு மருத்துவமனைக்கு மேற்கே தொட்லாகவுண்டர் மகன் சுரேஷ் .என்பவரின் மாந்தோப்பில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுடன் கூடிய நடுகல் இருப்பதை அறிந்து அதை படி எடுத்தனர்.

இந்த நடுகல்லில் வீரன் ஒருவன் வில்லேந்தி போரிடுவது போன்று வடிக்கப்பட்டுள்ளது. மேல்புறம் 9 வரிகளில் கல்வெட்டு உள்ளது.
இக் கல்வெட்டின் வாயிலாக தற்போது பனகமுட்லு என்று தற்போது அழைக்கப்படும் இந்த ஊர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் வண்ணக்கமுட்டல்  என்று அழைக்கப்பட்ட செய்தி தெரியவருகிறது. அப்போது இந்த ஊரின்மீது படையெடுத்து வந்த தாமய தண்ணாக்கன் என்பவனது படையை அழித்து தானும் இறந்து போனான் காமிண்டர் கோவிந்தாண்டை ஆந்தையந் அடியான் பணிக்கமாராயன் மகன் படலன் என்ற வீரன். இவனது உயிர்த் தியாகத்தினை போற்றும் வகையில் இவனது உருவத்தை கல்லில் வடிக்கச செய்தார் கோவிந்தாண்டை. காணிகாத்தான் இக் கல்லை நட்டு வைத்தார் என்ற செய்திகளைத் தெரிவிக்கிறது இந்த கல்வெட்டு. இதன் அருகே இரண்டு நடுகற்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன.
இந்த ஆய்வுப்பணியில் தமிழ்செல்வன். மதிவாணன்,  காவேரி ,ரவி. விஜயகுமார் , பிரகாஷ், கணேசன், விமலநானன் ஆகியோர் ஈடுபட்டனர். ஊர் மக்கள் இப்பணிக்கு பெரு உதவியாக இருந்தனர்














No comments:

Post a Comment