மல்லபாடி அருகே உள்ள நாடார் கொட்டாய் என்ற இடத்தில் ஏரிக்குச் செல்லும் வழியில் ஒரு நடுகல் காணப்படுகிறது இந்த நடுகல் ஏறக்குறைய 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் ஒரு வீரன் ஒரு கையில் வாளையும் ஒரு கையில் கட்டாரியும் பிடித்துக் கொண்டு நிற்கிறான் அவன் ஆபரணங்களை அணிந்து காணப்படுகிறான் இடையில் ஒரு குறுவாளும் உள்ளது அவன் ஒரு பூசலில் இறந்ததால் அவனுடைய மனைவி உடன்கட்டை ஏறி இறக்கிறாள் அவள் ஒரு கையில் மது குடவையும் ஒரு கையை மேல் நோக்கி காட்டியவாறு காணப்படுகிறது இது ஒரு சதிக்கல் வகை
A hero stone is found on the way to the lake at a place called Nadar Kottai, near Mallapadi. This stone likely dates back to the 17th century. It depicts a warrior standing with a sword in one hand and a katar (punch dagger) in the other. He is adorned with ornaments and has a short sword tucked at his waist. Because he died in a skirmish, his wife committed Sati (self-immolation on her husband's funeral pyre). She is portrayed holding a pot of wine in one hand, with her other hand pointing upwards. This monument is classified as a Sati stone
.png)
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவானது 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வளையமைப்பு நடத்திய மகளிர் தினம் அன்று (8.3.2018) மதிப்புமிகு இணை இயக்குனர் கே.,பி.மகேஸ்வரி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் நோக்கம் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு செய்து அதனை அறிந்து கொள்வதும் வரலாற்று தடயங்களை ஆவணப்படுத்துவதும் அதை பொதுமக்களுக்கு தெரிவிப்பதும் நோக்கமாகக் கொண்டது தங்கள் பகுதியில் கல்வெட்டுகள் நடுகற்கள் பழமையான கோவில்கள் போன்றவை இருப்பின் எங்களுக்கு தகவல் கொடுத்தால் நாங்கள் அங்கு வந்து ஆய்வு செய்து அதை ஆவணப்படுத்துகிறோம் இந்த அமைப்பு கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகம் தொல்லியல் துறை ஆகியவற்றோடு இணைந்து செயல்பட்டு வருகிறது நன்றி வணக்கம்
தொடர்புக்கு - தலைவர் நாராயணமூர்த்தி - 9442276076
செயலர் தமிழ்செல்வன் - 9787536970
Follow this link to join my WhatsApp group:

.jpg)

.png)



No comments:
Post a Comment