ஆநிரை கவர்தல் என்பது போர் காலத்தில் எதிரி நாட்டு மன்னன் உள் புகுந்து நம்நாட்டு காளைகளையும், பசுவினங்களையும் கைப்பற்றுதல் ஆகும். அதனை வெற்றி கொண்டு மீட்டலே ஆநிரை மீட்டல் என இலக்கியம் பறை சாற்றுகிறது.
இந்த வீரன் வில்வித்தையிலும், வாட்போரிலும் , வல்லவனாக இருக்க கூடும்
வீரமரணம் அடைந்த இவன் தேவ கன்னியரால் சொர்கத்துக்கு செல்வது காட்டப்பட்டுள்ளது.
இந்த வீரன் வில்வித்தையிலும், வாட்போரிலும் , வல்லவனாக இருக்க கூடும்
நடுகல்லின் வலதுபுறம் மேற்புறத்தில் இவ்வீரனுடைய குதிரையும் போரில் இறந்திருக்க வேண்டும் அல்லது இவன் குதிரை வீரனாக இருக்ககூடும் . குதிரையின் கீழ் பக்கத்தில் இவன் இறந்தபின் அவன் மனைவி உடன்கட்டை எறுவதுபோல் காட்டப்பட்டுள்ளதால் இது சதிக்கல்
தகடூர் நாட்டு எயிநாட்டு( நாட்டுக்காமுண்டன் அதை... பாபேழையந் வீரன் நக்குடியாந் ராஜேந்திரசோழ காமுண்டன் எயிநாட்டு மிரோவப்பள்ளி திருப்பேறு எறிந்து மாடு நிலத்துவை பங்கள நாட்டு ஆச்சாடி உள்ளிட்ட மாடப்பியரை கொள்ள மாடு மீட்டு போரில் இறந்தவர்.
ராஜேந்திர சோழனுடைய 24 வது ஆட்சி ஆண்டில் (கி.பி.1036) ராசேந்திர சோழ கமுண்டான் என்ற வீரன் தன் நாடான எயில்(கிருஷ்ணகிரி) நாட்டின் மீது பங்கள நாட்டவர் படைக்கொண்டு வந்து ஆநிரைகளை கவர்ந்து சென்றதை மீட்கும் போரில் உயிர் துறந்தார் என்று கல்வெட்டு கூறுகிறது.
“சோழதேவர்க்கு யாண்டு இருபத்து னாலா
வது நிகரிலி சோழ மண்டலத்து தகடூர் னா
ட்டு எயிநாட்டுனாட்டுக் கமுண்டத் அ
தீப்(பால) பெழையந் வீரன் நக்குடியாந்
இராஜே சோழ கமுண்டான் எயிநாட்டு
மி(ரோ)வப்பள்ளி திருப்பேறு ஏறி மாடு நிலத்துவை
பங்கள நாட்டு ஆச்சாடி உள்ளிட்ட மாடப்பியரை
கொள்ள மாடு மீட்டு ஊரழிய பட்டார்”
கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காவரம் ஊரின் வடமேற்கு பக்கமுள்ள திரு. மாதையன் நிலத்தில் உள்ள நடுகல்
செயலர் டேவீஸ் -9487723678
பொருளர் விஜயகுமார் --9488830969
கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காவரம் ஊரின் வடமேற்கு பக்கமுள்ள திரு. மாதையன் நிலத்தில் உள்ள நடுகல்
எங்களால் இயன்றது . நன்றி
தலைவர் - நாராயணமூர்த்தி- 9442276076
செயலர் டேவீஸ் -9487723678
பொருளர் விஜயகுமார் --9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன்
-9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு
மற்றும் ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி
அறக்கட்டளை நடத்துவதாகும்
No comments:
Post a Comment