Sunday, 9 December 2018

51.-2500 YEARS OLD MALLAPADI ROCK PAINTING - மல்லப்பாடி பாறை ஓவியங்கள் -HISTORY OF KRISHNAGIRI -KHRDT

மலைக்கவைக்கும் மல்லப்பாடி பாறை ஓவியங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூரிலிருந்து கிழக்கே சுமார் 4 கி.மீ.தொலைவில்  மல்லபாடி எனும் கிராமம் உள்ளதுஇக்கிராமத்துக்குப் பின்னால் உள்ள மலை அடிவாரத்தில்  விஜயநகர காலத்துப் பெருமாள் கோயில் உள்ளது. அக்கோயிலில் இருந்து சுமார் 300 அடி தூரத்தில்  உள்ள வண்ணாத்திபாறை / வண்ணான் கெவி எனும் பாறை ஒதுக்கில் சில ஓவியங்கள் வரையப்பட்டுள்ளனதமிழகத்தில் முதன் முறையாக பாறை ஓவியம் 1980 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழக தொல்லியல் துறை ஆய்வாளர்களால்  கண்டுபிடிக்கப்பட்டன.
          இங்கு குதிரையின் மீது அமர்ந்துள்ள  இருவர் நீண்ட மூங்கில்களால் ஆநிரைகளை ஓட்டுதல் ஒருவருக்கு ஒருவர் நேர் எதிரே வருவது போன்று இந்த ஓவியம் அமைந்துள்ளது. இது வெண்சாந்து ஓவியமாகும். இது  மாடுகளை பட்டிக்கு ஓட்ட இப்படிபட்ட நீண்ட கழிகளை அக்கால மக்கள் பயன்படுத்தி இருக்கலாம்.  குதிரை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்துள்ளார் ஒரு கையால் குதிரையை பிடித்து இருக்கிறார் . அவர் 50 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக்கூடும் . ஓவியத்தில் தொப்பை காட்டப்பட்டுள்ளது. ஒரு கையில் நீண்ட கோலை பிடித்துள்ளார். தலையில்  உருமாலை கட்டியுள்ளார். குதிரையின் இருகாதுகள் முன்பகுதிநோக்கி இருப்பதும்  . குதிரையின் வாய் திறந்திருப்பதும்.  மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது.  குதிரையின் ஓவியத்தை தமிழகத்தில் சிறப்பானதாக இங்கே தான் காணமுடியும்.  இதே போன்று அச்சு அசலாக ஓவியம் அரேபிய பாலைவணத்தில் காணப்படுகிறது.என தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் கூறினார்.
இங்கு உருவங்களை கோட்டோவியங்களாக வரைந்த பின்னர் உட்புறம் வெள்ளை வண்ணத்தால் நிரப்பியுள்ளனர்.
Awesome Mallappadi rock paintings.

Mallappadi is a village in Krishnagiri district, about 4 km east of Bargur. The Vijaynagar Perumal Perumal Temple is located at the foot of the hill. The rock is about 300 feet away from the temple
 Some paintings are painted. The earliest rock sculpture in Tamil Nadu was discovered by the Archaeologists of Chennai University in 1980.         This painting is as if two men sitting on the horse are driving the fingers by long bamboots to each other. This is a Vancouver sketch. It may be used by people who have used these long-lived cows to drive cows. Horse is sitting on a horse and holding a horse with a hand. He may be over 50 years old. The belly is shown in the painting. He has a long goal in one hand. He has built the moon in the head. The horse's two faces are in front. The horse's mouth is open. Very nicely drawn. It is here that the horse's sketch is special in Tamil Nadu. Similarly, the axis of painting is found in the Arabian desert, according to archaeologist Sugavanamurugan. with Ggovindaraj
Here the drawings are drawn into the colonies, and the interior is filled with white color

 ஓவியத்திற்கு மேலே வீரன் ஒருவன் கையில் இரும்பு வாளுடன் மற்றும் இடுப்பில் குணா என்கின்ற வட்டுப்பகுதியும். கொண்டு வரையப்பட்டுள்ளது.
The top of the sketch is in the hands of the iron sword and the hood in the waist. Drawn up
 அந்த பாறையிலேயே காளை ஒன்று வரையப்பட்டுள்ளது.
The bull is painted on that rock.


கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு


  இங்கு நடை பெற்ற அகழ்வாராய்ச்சியில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த  தொல்குடிகள் பயன்படுத்திய  பொருட்கள்  அதிக அளவிலும், குறைந்த அளவில் புதிய கற்கால பானை ஓடுகளும் கிடைத்தன. இங்கு கிடைத்தவற்றில் கருப்பு  - சிவப்பு பானை ஓடுகள், கருப்பு பானை, சிவப்பு பானை மற்றும் சாம்பல் வண்ண பானைகள் குறிப்பிடத்தக்கவைகளாகும்இவ்வோவியங்கள் பெருங்கற்காலத்தில் சுமார் கி.மு. 500 – கி.பி 300 வரையிலான காலகட்டங்களில் வரைந்திருக்ககூடும் என தமிழகத் தொல்லியல் துறையினர் கணிக்கின்றனர்.
The excavations carried out here include a large quantity of materials used by the Great Depression, and the newest pottery tiles available. Black-red pot tiles, black pot, red pot and gray pots are noteworthy. These territories date back to about a century BC The Archaeological Department of Tamilnadu predicts that it can be dated from 500 to AD 300.


 இந்த இடத்தில்  கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராங்ஜ் அவர்கள் ஒரு கல் ஆயுதத்தை கண்டெடுத்தார்
At this place Krishnagiri museologist Govindarangz found a stone weapon


இந்த களப்பயணக் குழுவில் கிருட்டினகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் திரு. கோவிந்தராஜ், வரலாற்று ஆர்வலர் திரு.சுகவனமுருகன், தமிழ்செல்வன், ரவி, நாராயணமூர்த்தி, சீனிவாசன், கணேசன், மதியழகன், பிரகாஷ், , டேவிட், விஸ்வநாதன், கார்த்திக் இவர்களுடன் மாருதி மனோகரன் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு குழு சார்பில் மல்லப்பாடி சென்றடைந்தோம்...
வருகைதந்தவர்களு  நன்றி 
தவறுகள் இருப்பின் தயை கூர்ந்து தெரிவிக்கலாம்
அன்புடன் தமிழ்செல்வன் 9787536970

3 comments:

  1. your documenting history is precious. But , dating 500 BC is very later period I hope. let us see. congratulations for your team and effort, in revealing hidden history.

    ReplyDelete
  2. பாடி என்று முடியும் கோயில்கள் ஊர்கள் இடைசங்க பாண்டியர் காலத்தியது ; அந்த பாண்டிய மன்னர்கள் பாண்டிய மல்லர் , மல்லர் பாண்டியர் எனப்படுவோர் ; அதனை மல்லபாடி என்பது அதற்கு சான்று .

    ReplyDelete

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பணரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...