என்.தட்டக்கல் ஊர்கவுண்டர் சக்ரவர்த்தி மற்றும் விவசாயசங்கத்தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் தட்டக்கல்லில் பழைமையான் இடியும் நிலையில் இருந்த அம்மன் கோவிலின் இடிபாடுகளில் இருந்து ஒருகல்வெட்டை எடுத்து வைத்திருப்பதாகவும் அதனை ஆய்வு செய்யும் படியும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் காப்பாச்சியர் கோவிந்தராஜ் குழு தலைவர் நாராணமூர்த்தி குழுவுடன் சென்று ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
அருங்காட்சியக காப்பாச்சியர் கல்வெட்டை படிக்கிறார். ஆய்வின் போது தட்டக்கல் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்வெட்டு படித்தலை பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்
இந்த நடுகல் பழைய கோவிலின் கோணாவிட்டமாக பயன்படுத்தி இருந்தாக மக்கள் கூறினர். (மேற்கூரையில் உள்ள கல் ) இக் கோவில் அருகே புதிதாக ராமநாதேஸ்வரர் கோயில் ஒன்று இருப்பதையும் அங்கு ஒரு பழைமையான லிங்கம் இருப்பதையும் காணமுடிகிறது.
இந்த கல்வெட்டு கூறும் வரலாறு
செயலர் டேவீஸ் -9487723678
பொருளர் விஜயகுமார் --9488830969
அருங்காட்சியக காப்பாச்சியர் கல்வெட்டை படிக்கிறார். ஆய்வின் போது தட்டக்கல் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்வெட்டு படித்தலை பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்
இந்த நடுகல் பழைய கோவிலின் கோணாவிட்டமாக பயன்படுத்தி இருந்தாக மக்கள் கூறினர். (மேற்கூரையில் உள்ள கல் ) இக் கோவில் அருகே புதிதாக ராமநாதேஸ்வரர் கோயில் ஒன்று இருப்பதையும் அங்கு ஒரு பழைமையான லிங்கம் இருப்பதையும் காணமுடிகிறது.
இந்த கல்வெட்டு கூறும் வரலாறு
ஒய்சாள மன்னன் வீரராமநாதனின் 33 ம் ஆட்சியாண்டில். அதாவது கி.பி. 1287 ல் பெருமுகைப்பற்று துவரப்பள்ளி முதலிகள் , வேளார் , மற்றும் விக்கரம சோழநாட்டு நாயகஞ்செய்வாரோடு தத்தக்கல் முதலிகளும் இணைந்து அழகிய மணாவாளன் என்ற பட்டனுக்கு பட்ட விருத்தியாக நில தானம் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. தட்டக்கல் என்று இன்று அழைக்கப்படும் இவ்வூர் 650 ஆண்டுகளுக்கு முன் இக்கல்வெட்டில் தத்தக்கல் என்று அழைக்கப்பட்டு இருந்தது தெரியவருகிறது.
733 ஆண்டுகளுக்கு
முன் இந்த ஊர் இருந்துள்ளதற்காண ஆதாரம்
தட்டக்கல் - தத்தக்கல்
தொகரப்பள்ளி –
துவரப்பள்ளி
இதில் குறிப்பிடப்படும்
பெருமுகை என்பது தற்போதுள்ள பெரியமலையை குறிக்கலாம்
இந்த ஆய்வில் தமிழ்செல்வன் கணேசன். விஜயகுமார்.
மாருதி மணோகரன் , சுகவனமுருகன் ,சதாநந்த கிருஷ்ணகுமார் ஆகியோர்
கலந்து கொண்டனர்
எங்களால் இயன்றது . நன்றி
தலைவர் - நாராயணமூர்த்தி- 9442276076
செயலர் டேவீஸ் -9487723678
பொருளர் விஜயகுமார் --9488830969
ஒருங்கிணைப்பாளர்
தமிழ்செல்வன்
-9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு
மற்றும் ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின்
ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும்
No comments:
Post a Comment