Sunday, 1 December 2024

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பணரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் Dr.லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அழைப்பின் பேரில் சென்ற போது இதுவரை ஆவணப்படுததாத பாறை ஓவியம் கண்டறியப்பட்டது. ஆய்வுப்பணியில் ,கல்வெட்டு காவலன் கோவிந்த ராஜ் , அருங்காட்சியக காப்பாச்சியர் சிவக்குமார் , தமிழ்செல்வன் https://youtu.be/4CZRlfDNMb0
செய்தி கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை அருகே உள்ள அங்கனாமலை வனப்பகுதியில், டாக்டர் லோகேஷ் மற்றும் கிராம மக்கள், பழமையான பாறை ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகள் இருப்பதாக, மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவிற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார், முன்னாள் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர், அங்கனாமலை வனப்பகுதிக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து முன்னாள் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: 13ம் நுாற்றாண்டுகளின் கல்வெட்டுக்கு அருகே பனமரத்து பந்தா என்ற இடத்தில் உள்ள பெரிய பாறையில், 3 இடங்களில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. ஒன்றில், குறியீடுகளும், இரண்டாவது ஓவியயத்தில், 4 மனித உருவங்களும், மூன்றாவதில், மனிதர்கள் நடனம் ஆடும் நிலையில் உள்ள பாறை ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. இந்த பாறையின் அடிபாகத்தில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும், இறந்தவர்களை வணங்குவதற்காக பாறையில் அகல் விளக்கையும் செதுக்கியுள்ளனர். இதிலிருந்து, இந்த இடம் இறந்தவர்களின் நினைவிடமாகவும், தொடர்ந்து வழிபடவே பாறையில் விளக்கை செதுக்கியும் வைத்துள்ளனர் என்று தெரிகிறது. இப்பகுதியில் அதிக அளவில் பாறை ஓவியங்கள், கல்வெட்டுகள், கற்திட்டைகள் போன்றவை காணப்படுவதால், இந்த இடத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இங்கு கடந்த முறை ஆய்வு செய்யப்பட்டபோது, கல்திட்டைகளில் கருப்பு, வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
https://maps.app.goo.gl/H5XCVm3HJmNiBTbR7 அன்புடன் தமிழ்செல்வன் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகிரி ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தங்கள் பகுதியில் வரலாற்று ஆதாரங்கள் ஏதாவது இருப்பின் தகவல் தரவும் வந்து அதன் பழமையை கூறுகிறோம் தொடர்புக்கு 9787536970

No comments:

Post a Comment

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பணரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...