Saturday, 7 June 2025

என். தட்டக்கல் கி.பி 12 ம் நூற்றாண்டு ஒய்சள மன்னன் வீரராமநாதனின் 23ம் ஆட்சியாண்டில் பட்டவிருத்தியாக அழகிய மணவாள பட்டனுக்கு அளித்த தானத்தை குறிக்கிறது.அழைக்கப்பட்டது தெரியவருகிறது.

https://youtu.be/W6cjvlKFIkw
தட்டக்கல் கல்வெட்டு கிருஷ்ணகிரி வரலாற்றினை தேடி கண்டறிந்து தொகுத்து வழங்கும் பணியை கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் அவணப்படுத்தும் குழு மேற்கொண்டு வருகிறது . அதன் ஒருபகுதியாக காவேரிப்பட்டிணம் என்.தட்டக்கல் ஊர்கவுண்டர் சக்ரவர்த்தி மற்றும் விவசாயசங்கத்தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் தட்டக்கல்லில் பழைமையான் இடியும் நிலையில் இருந்த அம்மன் கோவிலின் இடிபாடுகளில் இருந்து ஒருகல்வெட்டை எடுத்து வைத்திருப்பதாகவும் அதனை ஆய்வு செய்யும் படியும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் காப்பாச்சியர் கோவிந்தராஜ் குழு தலைவர் நாராணமூர்த்தி குழுவுடன் சென்று ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இந்த நடுகல் பழைய கோவிலின் கோணாவிட்டமாக பயன்படுத்தி இருந்தாக மக்கள் கூறினர். (மேற்கூரையில் உள்ள கல் ) இக் கோவில் அருகே புதிதாக ராமநாதேஸ்வரர் கோயில் ஒன்று இருப்பதையும் அங்கு ஒரு பழைமையான லிங்கம் இருப்பதையும் காணமுடிகிறது. இந்த கல்வெட்டில் உள்ள செய்தி ஒய்சாள மன்னன் வீரராமநாதனின் 33 ம் ஆட்சியாண்டில். அதாவது கி.பி. 1287 ல் பெருமுகைப்பற்று துவரப்பள்ளி முதலிகள் , வேளார் , மற்றும் விக்கரம சோழநாட்டு நாயகஞ்செய்வாரோடு தத்தக்கல் முதலிகளும் இணைந்து அழகிய மணாவாளன் என்ற பட்டனுக்கு பட்ட விருத்தியாக நில தானம் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது. தட்டக்கல் என்று இன்று அழைக்கப்படும் இவ்வூர் 650 ஆண்டுகளுக்கு முன் இக்கல்வெட்டில் தத்தக்கல் என்று அழைக்கப்பட்டு இருந்தது தெரியவருகிறது. இக்கல்வெட்டில் வரும் பெருமுகைப்பற்று செஞ்சி அருகே மேல்களவாய் கிராமத்தில் உள்ள ஏரியில் விஜயநகர மன்னர் கால தமிழ் கிரந்த கல்வெட்டிலும் . திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் தொரைப்பாடியில் அமைந்த வட்டெழுத்து நடுகல்லிலும் (செங். நடு. 33/1971) பெருமுகை என்ற நாடு 6ஆம் நு◌ாற்றாண்டிலே இருப்பதும் இந்த நாட்டின் கீழ் தட்டக்கல் இருந்ததற்கும் ஆதாரமாகக் கொள்ளலாம் இந்த ஆய்வில் கணேசன். விஜயகுமார். மாருதி மணோகரன் , சுகவனமுருகன் ,சதாநந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
https://maps.app.goo.gl/FGGBaC9RpjegtLun6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...