தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Thursday, 19 June 2025
மல்லசந்திரம் கற்திட்டைகள் உள்ள மலையின் கிழக்கு பகுதியில் உள்ள அடுத்த பாறையில் பெருங்கற்கால பாறை ஓவியம்
மல்லசந்திரத்தில் புதிய பாறை ஓவியம் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் பீர்பள்ளியை ஒட்டிய மல்லசந்திரம் மோரல் பாறை கல்திட்டைகள் புகழ்பெற்றவைகளாகும். இவை அடுத்தடுத்த இரண்டு பாறைப் பரப்புகளில் காணப்படுகின்றன. இங்கு ஏற்கனவே11 கல்திட்டைகளில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது இப்பாறைகளுக்கு எதிரே உள்ள மலைப்பகுதியில் புதிதாக பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. பாறை ஓவிய ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார், ப்ரகாஷ் ஆகியோர் கண்டறிந்து அளித்த தகவலின் பேரில் மத்திய பல்கலைக் கல்லூரி மாணவர்களுடன் கிருஷ்ணகிரி அருங்காட்சியகம். தொல்லியல் துறை, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவ்ணப்படுத்தும் குழுவினர் இணைந்து களப்பயணம் மேற்கொண்டனர். இது குறித்து அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது.
இப்பாறை ஓவியம் வரையப்பட்டுள்ள பாறையை ஒரு கல் திட்டையோடு ஒப்பிடும் வண்ணம் இவ்வோவியம் கூரையில் இல்லாமல் செங்குத்துக்கல்லில் வரையப்பட்டுள்ளது. இதில் நிரப்பப்பட்ட பெருக்கல்குறி போன்ற உடலமைப்புடன் ஒரு மனித உருவம் இரு கைகளையும் தூக்கி இடுப்பில் கத்தியுடன் நடந்து செல்வதாகவும், அருகில் கோட்டுருவத்தில் ஒரு மனிதன் மாட்டை பிடித்துவருவது போலவும் வரையப்பட்டுள்ளது. பெருக்கல் குறி போன்ற உடலமைப்புக் கொண்ட ஓவியம் ஐகுந்தம் போன்ற பிற இடங்களிலும் செஞ்சாந்தில் வரையப்பட்டுள்ளன. இது புதியகற்கால மரபின் தொடர்ச்சியாகும். பின்னாளில் உருவான ஆநிரைமீட்டல் நடுகல் உருவத்தின் முன்னோடியாக இந்த பாறை ஓவியத்தைக் கூறலாம். சங்க இலக்கியங்கள் மாட்டை செல்வம் என்றும், கால்நடைகளுக்காக ஏராளமாக சண்டைகள் நடந்துள்ளதையும், அச்சண்டைகளில் இறந்த வீரர்களின் நினைவாக நடுகல் எடுக்கப்பட்டதையும் பதிவுசெய்துள்ளன. இத்தகைய இலக்கிய செய்திகளைத்தான் இப்பாறை ஓவியங்களும் பிரதிபலிக்கின்றன.. எனவே இப்பாறை ஓவியம் இப்பகுதியின் சமூக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த களப்பயணத்தின்போது கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், சதானந்த கிருஷ்ணகுமார், ப்ரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் விவரங்களுக்கு
https://youtu.be/-JRLMHg5X0g
https://maps.app.goo.gl/HHJgb51nEJsiQTMP8
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் .
தொடர்புக்கு
தலைவர் நாராயனமூர்த்தி 9448876076
ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970
காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340
மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987
வரலாற்று ஆசிரியர் ரவி 8122341228வாட்சப்குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும்
ஆவணப்படுத்தும் குழு @KHRDT
Subscribe to:
Post Comments (Atom)
-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
இது சாக்கியமாள் என்று இன்றும் வழிபாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுக்கான நடுகல் இதில் ஒரு கையை உயர்த்தி ஒரு விரலை காட்டும் வகையிலும் ,தோள்மாலை இ...
-
காணொலி - https://youtu.be/wmlf11rwjsw https://maps.app.goo.gl/c89C8B1bNXG2pRob6










No comments:
Post a Comment