Friday, 6 June 2025

பெல்லம்பள்ளி கல்வெட்டு - கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்

கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் -பெல்லம்பள்ளி-ஸ்ரீமது வரதய்ய நாயக்கர்-தண்டிகை சீவிதம்-MUSEUM& KHRDT
https://youtu.be/OSk8SIzShmw
பெல்லப்பள்ளியின் கிழக்கு பகுதியில் இருக்கும் வரதையநாயக்கர்- கால கல்வெட்டு 350 ஆண்டுகளுக்கு முன்பே பெல்லம்பள்ளி (விழாம்பள்ளி) இருந்ததற்கான ஆதாரத்தை தருகின்றது
https://youtu.be/rkleFpsLWXQ
காலம்: சுமார் பொது ஆண்டு 16ம் நூற்றாண்டு கிருஷ்ணகிரி வரலாறில் கண்டறிப்பாடத பல இன்னும் உள்ளன அதை மெய்பிக்கும் வகையில் மேலும் ஒரு கல்வெட்டு கிருஷ்ணகிரி வரலாறில் சேர்க்கப்படுகின்றது. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவர் மற்றும் வரலாற்று ஆசிரியர் ரவி ஆகியோர் பெல்லம்பள்ளியி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது ஒரு கல்வெட்டினைக் கண்டறிந்தனர் . 12 அடி உயரமுள்ள பாறைக்குண்டின் கிழக்குபக்கத்தில் அந்த கல்வெட்டு செதுக்கப்பட்டு உள்ளது முழுவதும் புதர் மண்டி இருந்ததை கல்லு◌ாரி மாணவர்கள் அஜித் மற்றும் பிரகாஷ் ஆகியேர் சரிசெய்து அந்த கல்வெட்டினை படிஎடுக்க உதவினர் இந்த கல்வெட்டு படித்த அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்ராஜ் அவர்கள் கூறியதாவது . சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வரதய்ய நாயக்கர் என்பவர்; இப்பகுதியை ஆண்டபோது அவர் விழாப்பள்ளியில் ஒரு ஏரியைக் கட்டியதற்காக வெண்ணையாழ்வர் காமிண்டருக்கு தண்டிகை சீவிதமாக நிலம் வழங்கிய தானக் கல்வெட்டு இதுவாகும். தண்டிகை சீவிதம் என்பது பல்லக்கு வைத்துக் கொள்வதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் வழங்கப்பட்ட வரி நீக்கிய நில தானமாகும். இந்த வகை தானத்தைக் குறிக்கும் கல்வெட்டு காரிமங்கலத்தையடுத்த வளைக்காரன்பட்டியிலும் உள்ளது. இக்கல்வெட்டில் வரும் விழாப்பள்ளி என்னும் ஊர் தற்போது மருவி பெல்லம்பள்ளி என்றழைக்கப்படுகிறது . ஆய்வுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் இந்த பகுதியில் வைணவத்தின் தடையங்களாக 300 -350 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்படட இரண்டு பிருந்தாவணம் இருப்பதும். 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோமேஷ்வரர் சிவ ஆலையமும் நல்ல நிலையில் உள்ளது. இது மட்டுமல்லாமல் நான்கு நடுகற்களும் இவவூரின் வரலாற்று சிறப்பினை சொல்கின்றன என்றார் இந்த ஆய்வுப்பணியில் பெல்லம்பள்ளி கோவிந்தசாமி துரைராஜ் வெங்கடேசன் அஜித் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும்வரலாற்றினைக் தேடி கிருஷ்ணகிரி பெல்லம்பள்ளி பட்டன்கொள்ளை கோவிந்தசாமி துரைராஜ் வெங்கடேசன் அஜித் மற்றும் பிரகாஷ் படிஎடுக்க உதவினார்கள் செய்தி: சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் வரதய்ய நாயக்கர் என்பவர்; இப்பகுதியை ஆண்டபோது அவர் விழாப்பள்ளியில் ஒரு ஏரியைக் கட்டியதற்காக வெண்ணையாழ்வர் காமிண்டருக்கு தண்டிகை சீவிதமாக நிலம் வழங்கிய தானக் கல்வெட்டு இதுவாகும். தண்டிகை சீவிதம் என்பது பல்லக்கு வைத்துக் கொள்வதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் வழங்கப்பட்ட வரி நீக்கிய நில தானமாகும். இந்த வகை தானத்தைக் குறிக்கும் கல்வெட்டு காரிமங்கலத்தையடுத்த வளைக்காரன்பட்டியிலும் உள்ளது. இக்கல்வெட்டில் வரும் விழாப்பள்ளி என்னும் ஊர் தற்போது மருவி பெல்லம்பள்ளி என்றழைக்கப்படுகிறது.
Map
https://maps.app.goo.gl/GuYwUWrTsWDkW57P6
நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவதில் உங்களின் உதவி எங்களுக்க தேவை . நாம் இணைந்தே இந்த வரலாற்றனை மேம்படுத்துவோம் . எனவே உங்கள் ஊரில் இப்படி நடுகற்கள் , கல்வெட்டுகள், பழைய கோவில்கள் இருப்பின் தெரியபடுத்தவும் , வாருங்கள் நமது மாவட்டத்தின் வரலாற்றினை மேம்படுத்துவோம் . தொடர்புக்கு ஒருங்கியைப்பாளர் தமிழ் செல்வன் 9787536970 காப்பாச்சியர் சிவக்குமார் 86809 58340 மேநாள் காப்பாச்சியர் கோவிந்த ராஜ் 79045 13987 வாட்சப்குழுவில் இணைந்திட https://chat.whatsapp.com/EyXDAX0i4KB7eTAbItqtxh கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு

No comments:

Post a Comment

தளி ஏரிக்கரையில் இருந்த கல்வெட்டு தற்போது கெலமங்கலம் தாலுகா அலுவலகத்தில்

 இப்படத்தில் உள்ள கன்னட உரையின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 81 21. தளி, ஏரிக்கரையின் மீது உடைந்த நிலையில் கிடக்கும் கல்லில...