Monday, 30 December 2024

KHRDT வருடாந்திர கூட்டம்

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் குழுவின் வருடாந்திர செயற்குழு கூட்டம் தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக வளாகத்தில் இன்று நடைபெற்றது. வரும் 2025 ஆம் ஆண்டு ' அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து செய்ய வேண்டிய பணிகள் பற்றி இந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது அதன்படி அடுத்த ஆண்டிற்கான திட்டங்கள் பட்டியலிடப்பட்டன
கூட்டத்தில் மேநாள் அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ், தொல்லியல் அலுவலர் பரந்தாமன், சரவணகுமார் ராமச்சந்திரன் மாருதி மனோகரன், சுந்தரம், அறக்கட்டளை செயலர் அப்துர் ரகுமான் , சாதிக், பாலாஜி, கார்த்தி, லசிமாபேகம் , டெய்சி, ரெஜ்லின்தீப்தி ஆஅருங்காட்சியக பணியாளர் செல்வகுமார் , கியோர் கலந்து கொண்டனர் . நிகழ்வினை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஒருங்கிணைத்தார் .

17th Century Hero Stones - Vijayanagara Period -17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் - விஜயநகர காலம்

குதிரை தாவும் நிலையில் காட்டப்பட்டுள்ளது அதன்மேல் ஒரு வீரன் குதிரையின் கடிவாளத்தை பிடித்த வாரும் மறுக்கையில் வாளை ஏந்தியவாறும் காட்டப்பட்டு...