Saturday, 14 December 2024

கானம்பட்டி கல்வெட்டு -கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள் (காணம்பட்டி) திருவண்ணாமலை குறியீட்டுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் கல்வெட்டு

திருவண்ணாமலை குறியீட்டுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் கல்வெட்டு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலில் திருவண்ணாமலை குறியுடன் கண்டறியப்பட்ட கணம்பட்டி கல்வெட்டு - மகதை மண்டலத்தின் பிரகதாம்பாள் , பெரிய செல்வி பேரில் இலக்கியன் கொடுத்த தானம் -திருவண்ணாமலையை குறிக்கும் மலை & ஜோதியை குறிக்கும் முகோண குறியீட்டுடன் வன்நெஞ்ச பெருஞ்சானார் -அண்ணாமலையான ,திருவண்ணாமலையான வாசகங்கள் இதை கண்டறிந்தவர்கள் ஆசிரியர்கள் செந்தில் ,வெங்கடேசன், ஆய்வுப்பணியில் கல்வெட்டு காவலன் கோவிந்தராஜ் . பாலாஜி , செந்தில் , வெங்கடேசன் https://youtu.be/fCvkMGV0Vf0
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலில் திருவண்ணாமலை குறியுடன் கண்டறியப்பட்ட கணம்பட்டி கல்வெட்டு – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருவண்ணாமலை மலைஜோதி குறியீடுடன் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஊத்தங்கரை ஒன்றிய ஆசிரியர்கள் வெங்கடேசன் , செந்தில் ஆகியோர் எங்கள் பகுதியில் புதியகல்வெட்டு உள்ளதாக கொடுத்த தகவலின் படி கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகமும் , கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் ஊத்தங்கரை ஒன்றியம் கானம்பட்டி இருசங்கு குட்டை என்ற இடத்தில்இருக்கும் பெரிய பாறைக்கு சென்று பார்த்ததில் அதன் மேற்பகுதியில் மூன்று இடங்களில் கல்வெட்டு , மற்றும் குறியீடுகள் இருப்பதை கண்டு அதை படிஎடுத்து படிக்க ஆரம்பித்தோம் . கிருஷ்ணகிரியில் முதன் முறையாக கல்வெட்டுகளில் உள்ள குறியீடுகளில் திருவண்ணாமலையின் முக்கோண குறியீடு உள்ளது குறிப்பிடத்தக்கது-இது திருவண்ணாமலையின் மீது தீபம் ஏற்றப்படுவதை குறிப்பிடுகிறது. இதனுடன் கோபுரம், சூரியன் , சந்திரன், வாள் , போன்ற குறியீகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. முதல் கல்வெட்டில் மகதைமண்டலத்தை சேர்ந்த ஏமாடு பனையதம்பாள் மற்றும் பெரிய செல்வி இருவரும் மணல் மற்றும் பூமி இருக்கும் வரை இருப்பார்கள் என அவர்களின் நினைவாக இலக்கியன் என்பவர் குறித்துள்ளார். கல்வெட்டின் இறுதில் இப்படிக்கு இலக்கியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் கல்வெட்டில் அண்ணாமலை என்ற திருவண்ணாமலை என்பவரின் வயது 77 என கறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் கல்வெட்டில் வன்நெஞ்சப்பெரும் சானார் என்ற வீரரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது இம் மூன்று கல்வெட்டுகளும் 17 ஆம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தவை. இந்த ஊர் பழங்கால பெருவழியில் அமைந்திருக்கவேண்டும். தொலை தூரத்தில் இருந்து இவ்வழியாக திருவண்ணாமலைக்கு சென்ற பக்தர்கள் இக்கல்வெட்டுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த சி.ஆண்டாப்பட்டு உள்ளிட்ட சில கல்வெட்டுகளிலும் திருவணணாமலையின் மூக்கோணகுறி உள்ளது குறிப்பிடத்தக்கது என்று முன்னால் அருங்காட்சியக காப்பாச்சியர் கோவிந்தராஜ் கூறினார். ஆய்வுப்பயணத்தில் அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார். வரலாற்று ஆய்வுக்குழுவின் தமிழ்செல்வன் . பாலாஜி , செந்தில் வெங்கடேசன் ஊர் மக்கள் ஆகியோர் இருந்தனர் .
ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகிரி ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தங்கள் பகுதியில் வரலாற்று ஆதாரங்கள் ஏதாவது இருப்பின் தகவல் தரவும் வந்து அதன் பழமையை கூறுகிறோம் தொடர்புக்கு 9787536970
https://maps.app.goo.gl/bCiseDo43GD8hDnW6

No comments:

Post a Comment

புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர்

தமிழகத்தில் முதல்முறையாக புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, பள்...