தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி வரலாற்றை அருங்காட்சியகத்துடன் இணைந்து கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதல்
Saturday, 7 December 2024
ஏக்கல்நத்தம் - 6,.7,.8, மாணவர்கள் வரலாற்று களப்பயணம் -
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து சிந்து சமவெளி நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் வகையில் ஏக்கல்நத்தம் என்ற மலைப்குதியை சேர்ந்த மாணவர்களுக்கு வரலாற்று ஆர்வத்தை ஏற்படுத்தவும் தங்களின் சமுக அறிவியல் பாடப்பகுதியில் வரும் பகுதிகளை பார்க்கவும் , நேரடியாக கண்டு அறிய களப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது
அதன்படி முதலில் 6 ஆம் வகுப்பில் வரும் சமணமும் பௌத்தமும் பாடத்தில் கூறப்பட்ட தீர்த்தங்கள் பற்றி அறிய கிருஷ்ணகிரியில் உள்ள பத்மாவதி கோவிலுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று சமணம் பற்றி கூறப்பட்டது .
கிருஷ்ணகிரியில் கி.பி 1058 இரண்டாம் ராஜேந்திர சோழரின் கல்வெட்டுகளை கொண்ட சோமேஷ்வரர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கல்வெட்டுகளையும் கோவில் கட்டிடக்கலைபற்றியும் மாணவர்களுக்கு அருங்காட்சியக காப்பாச்சியர் சிவகுமார் அவர்கள் மாணவர்களுக்கு விளக்கினார்
அருங்காட்சியத்தில் வரலாற்றில் வரும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் பாடத்தில் வரும் மக்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் மாணவர்களுக்கு காட்டி விளக்கப்பட்டது அதுமட்டுமல்லாது நடுகற்கள் , கல்வெட்டுகள் , பிரங்கி. ஓலைச்சுவடிகள் , கல்திட்டையில் உள்ள பானைகள் ஆகியற்றினை பற்றி காப்பாச்சியர் சிவக்குமார் கூறினார்
மாவட்ட மைய நூலகம் சென்ற மாணவர்கள் முதலில் கையொப்பம் இட்டு பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலக அலுவலர் பிரேமா அவர்கள் நூலகத்தின் செயல்பாடு மற்றும் பயன்கள் பற்றி கூறி குழுந்தைகளுக்கான புத்தகங்கள் கொண்ட அறைக்கு அழைத்து சென்று காட்டினார். அதன்பின்பு மெய்நிகர்கண்ணாடிகளை அணிந்து கொண்டு புதிய அனுபவத்தினை கண்டு மகிழ்ந்தனர்
அருட்தந்தையவர்கள் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்கவேண்டும் என்றும் கல்வியே மாணவர்களை நல்லமனிதராக்கும் என்று கூறினார்
இந்த களப்பயணத்திற்கு மிக முக்கிய காரணம் திரு. மருத்துவர் லோகேஷ் அவர்கள் - கிருஷ்ணகிரி ஒன்றியத்தின் கடைக் கோடி மலைகிராமான ஏக்கல்நத்தம் மாணவர்கள் கிருஷ்ணகிரியின் வரலாற்றினை அறிந்து கொள்ள கூறியதன் அடிப்படையிலேயே இந்த களப்பயணம் நடத்தப்படடது.
சினேகம் தொண்டு நிறுவனம்.. கிருஷ்ணகிரி சார்பில் மாணவர்களுக்கு சிறப்பான மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டது
அருங்காட்சியத்தில் மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முடிவில் கலந்து கொண்ட மணவர்களுக்கும் , ஏக்கல்நத்தம் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் K.R.K பாபு அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஏக்கல்நத்தம் வார்டு மெம்பர் ராமகிருஷ்ணன், ஜெகதீசன், பேபிராஜ் , ஶ்ரீமதி, மல்லிகா , ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன். என்றிபவுல் , ANBU GLOBAL FAMILYஉஷாஅன்பு, பாலாஜி, சாதிக்உசைன், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு ஓசூர்
தமிழகத்தில் முதல்முறையாக புலி சின்னத்துடன் கூடிய சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, பள்...

-
கிருஷ்ணகிரி ரயில்வே ஸ்டேசன் krishnagiri railway station Krishnagiri Train Station, Borivali N...
-
மகராஜகடை ஶ்ரீ திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனின் கால கல்வெட்டு -அங்கண அரசு -Dr. லோகேஷ் அவர்கள் உதவியால் ஜெயங்கொண்ட எயில்நாடாழ்வ...
-
கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இண...
No comments:
Post a Comment