Saturday, 28 March 2020

91.புதிய கண்டறிதல் 200 ஆண்டுகளுக்கு முன் தாசம்பட்டு இப்போதய தாசரிப்பள்ளி கல்வெட்டு ஆதாரம் KHRDT

 வரலாற்றில் ஆர்வமுடைய தாசிரிப்பள்ளி நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் திரு திருவேங்கடம் (ஆசிரியர் மன்ற தலைவர்) அவர்கள் மாந்தோப்பில் ஒரு பாறையில் எழுத்துக்கள் இருப்பதாக கூறி அழைத்துச் சென்றார் .எங்களுடன் பள்ளி மாணவர்கள் திவ்யபிரகாஷ் ,பிரகாஷ்ராஜ் ஆகியோர் இடத்தை காட்ட வந்திருந்தனர். அந்த நிலம் லோகேஷ் என்பரின் பூர்வீக நிலமாகும் .அந்த பாறையில் உள்ள எழுத்துக்கள் அடிக்கப்பட்டு 200 ஆண்டுகள் இருக்கும். 
கல்வெட்டு வாசகம்

1.ஹரி

2பவ_ வைகாசி மாதம் 15  ஆம் தேதி

3 தாசம்பட்டில் இருக்கும்

4 பப் பையன் குமரன் நகப்பன்

5.குமரனார் ஷசப்பன் அனுமார்

6.அடித்து வைத்தார்


 அருங்காட்சியக காப்பாச்சியர் கல்வெட்டை படி எடுத்து கூறியதாவது
  200 ஆண்டகளுக்கு முன்பு தாசம்பட்டி என்ற பெயர் தற்போது தாசரிப்பள்ளி என அழைக்கப்படுவதும். இந்த ஊர் உருவாகி 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பதும்.
      இது தமிழ் வருடங்களில் 8வது வருடமாகிய பவ வருடத்தின் வைகாசி 15 ஆம் தேதி அடிக்கப்பட்டதும் தெரியவருகிறது

 பப்பையன் என்பவரின் மகனாகிய நாகப்பன்( நகப்பன்) அவருடைய மகன் ஷசப்பன் இவ்விடத்தில் அனுமார் அடித்துவைத்தார். என்பதை தெரிவிக்கிறது. (இவர்கள் அவ்வூரின் லோகேஷ் என்பவரின் பரம்பரையைசேர்ந்த முன்னோர்கள் )




பெரியவர்களை விசாரித்தபோது அப்போதைய காலகட்டத்தில்  விஜயவாடா பகுதில் இருந்து வியாசராயர் வழிவந்த மத்த மடத்தினர் இப்பகுதியில் மதத்தை பரப்பி இருப்பதறகான ஆதாரங்கள் உள்ளன. அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த புடைப்புசிற்பம் வடிக்கப்பட்டிருக்கலாம். என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்து வந்தவர்கள் ஆந்திரா மச்சாவரம் ஸ்ரீ தாச ஆஞ்சநேயர் நினைவாக தாசம்பட்டு என்ற பெயர் வைத்திருக்கலாம் என கூறினர். இவ்வூரின் பெயர் குறித்து மேலும் ஆராயப்படவேண்டும்.

ஆய்வுப்பணியில் காப்பாட்சியர் , நான்(தமிழ்செல்வன்) திருவேங்கடம் -
இடம்    -
மாவட்டம்    -கிருஷ்ணகிரி
வட்டம்           -கிருஷ்ணகிரி
கிராமம்       - தாசரிப்பள்ளி


எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு கிருஷ்ணகிரி அருங்காட்சியத்துடன் இணைந்து வரலாற்றினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

Friday, 27 March 2020

90.பண்ணந்தூர் சென்னகேசவபெருமாள் கோவில் கல்வெட்டு -MUSEUM &KHRDT

       எங்கள் கணிப்பு படி அங்குள்ள தரவுகள் அடிப்படையில் கோவில் 1770களில் கட்டப்பட்டு இருக்க வாய்ப்பு அதிகம். பிற்பாடு இடியும் நிலையில் இருந்த அந்த கோவிலை வேலாயுத கவுண்டர் அவரது மகன்  பெரியத் தம்பி கவுண்டர் அவர்களால் மீண்டும் புதுபிக்கப்பட்டது என்பது கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இன்றும் அவர்கள் வழிவந்த இராதாகிருஷ்ணன் அவர்களால் தொடர்ந்து பணிகள் செய்யப்பட்டுவருகிறது 

இந்த கல்வெட்டு படிஎடுத்த சரவணன் 

விஜயகுமார்,பிரகாஷ், தமிழ்செல்வன்.சதாநந்தகிருஷ்ணகுமார் .சரவணன் நால்வரும்  பண்ணந்தூர்  ஆசிரியர் மோதிலால் அழைப்பின் பேரில் சென்றிருந்தோம் . எரிக்கரையில் இருந்த கல்வெட்டை பார்த்துவிட்டு ஊரில் உள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லாம் என பரம்பரை தர்மகர்த்தா இராதாகிருஷ்ணன் எங்களை அழைத்துச் சென்றார் அங்கே 120 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டை படிஎடுத்தோம்.

கல்வெட்டு வாசகம்
                .
1.     1900 பிப்பா வரி 9 ஆம் தேதி முதல் பண்னத்தூரு
2.     கிராமத்தில் ஆதியில் கட்டப் பட்ட சென்னகேஸ்வர சுவாமி கோவில் ஜீரன
3.     மாய் போய் இருந்ததை மேற்படி கிராமத்தில் வன்னிய குல சத்ரியற
4.     கிய கி மு (கிராம முன்சீப்) வேலாயுத கவுண்டர் குமாரர் பெரியத் தம்பி கவுண்ட
5.     ரும் அவர் பிள்ளை தீர்த்த மலைகவுண்டருமாய் இந்த ஆலையமும்
6.      சுற்று பிரகாரமும் முன் கோபுரமும் திருக்குளம் முதல் யாவை
7.     யும் புதுப்பித்து 1902 வருடம் எப்ரல் 16 தேதியில் கும்பாபி
8.     ஷேகம் நடத்தப்பட்டது பெரியதம்பி கவுண்டர்.

   விரைவில் கோவில் பற்றி முழு விவரங்கள் ஆய்ந்து  வெளிப்படுத்தப்படும்  இராதாகிருஷணன் ஆசிரியர் மோதிலால் ஆகியோர் உடன் இருந்து எங்களுக்கு உதவியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தொடர்புக்கு காரணம் திரு எஸ் சரவணன் வேலம்பட்டி ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி


 எங்களால் இயன்றது . நன்றி 

தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

Saturday, 21 March 2020

89.கி.பி. 1287 தட்டக்கல் கோணாவிட்டகல் கல்வெட்டு சொல்லும் செய்தி MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

 என்.தட்டக்கல் ஊர்கவுண்டர் சக்ரவர்த்தி மற்றும் விவசாயசங்கத்தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் தட்டக்கல்லில் பழைமையான் இடியும் நிலையில் இருந்த அம்மன் கோவிலின் இடிபாடுகளில் இருந்து ஒருகல்வெட்டை எடுத்து வைத்திருப்பதாகவும் அதனை ஆய்வு செய்யும் படியும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் காப்பாச்சியர் கோவிந்தராஜ் குழு தலைவர் நாராணமூர்த்தி குழுவுடன் சென்று ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
அருங்காட்சியக காப்பாச்சியர் கல்வெட்டை படிக்கிறார். ஆய்வின் போது தட்டக்கல் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கல்வெட்டு படித்தலை பார்வையிட்டு தெரிந்து கொண்டனர்
  இந்த நடுகல் பழைய கோவிலின் கோணாவிட்டமாக பயன்படுத்தி இருந்தாக மக்கள் கூறினர். (மேற்கூரையில் உள்ள கல் ) இக் கோவில் அருகே புதிதாக ராமநாதேஸ்வரர் கோயில் ஒன்று இருப்பதையும் அங்கு ஒரு பழைமையான லிங்கம் இருப்பதையும் காணமுடிகிறது.
 இந்த கல்வெட்டு கூறும் வரலாறு 
ஒய்சாள மன்னன் வீரராமநாதனின் 33 ம் ஆட்சியாண்டில்அதாவது கி.பி.  1287 ல் பெருமுகைப்பற்று துவரப்பள்ளி முதலிகள் , வேளார் , மற்றும் விக்கரம சோழநாட்டு நாயகஞ்செய்வாரோடு தத்தக்கல் முதலிகளும் இணைந்து அழகிய மணாவாளன் என்ற பட்டனுக்கு பட்ட விருத்தியாக நில தானம் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறதுதட்டக்கல் என்று இன்று அழைக்கப்படும் இவ்வூர் 650 ஆண்டுகளுக்கு முன் இக்கல்வெட்டில் தத்தக்கல் என்று அழைக்கப்பட்டு இருந்தது தெரியவருகிறது.

               
733 ஆண்டுகளுக்கு முன் இந்த ஊர் இருந்துள்ளதற்காண ஆதாரம் 
தட்டக்கல்   -   தத்தக்கல்
தொகரப்பள்ளி – துவரப்பள்ளி

இதில் குறிப்பிடப்படும் பெருமுகை என்பது தற்போதுள்ள பெரியமலையை குறிக்கலாம்
இந்த ஆய்வில் தமிழ்செல்வன் கணேசன். விஜயகுமார். மாருதி மணோகரன் , சுகவனமுருகன் ,சதாநந்த கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்


எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

Tuesday, 17 March 2020

88.ஆநிரை மீட்டல் -கங்காவரம் நடுகற்கள் கூறும் வரலாறு HERO Stons MUSEUM &KHRDT - HISTORY of KRISHNAGIRI

 ஆநிரை கவர்தல் என்பது போர் காலத்தில் எதிரி நாட்டு மன்னன் உள் புகுந்து நம்நாட்டு காளைகளையும், பசுவினங்களையும் கைப்பற்றுதல் ஆகும். அதனை வெற்றி கொண்டு மீட்டலே ஆநிரை மீட்டல் என இலக்கியம் பறை சாற்றுகிறது.
இந்த வீரன் வில்வித்தையிலும், வாட்போரிலும் , வல்லவனாக இருக்க கூடும் 



நடுகல்லின் வலதுபுறம் மேற்புறத்தில் இவ்வீரனுடைய  குதிரையும் போரில் இறந்திருக்க வேண்டும் அல்லது இவன் குதிரை வீரனாக இருக்ககூடும் . குதிரையின் கீழ் பக்கத்தில் இவன் இறந்தபின் அவன் மனைவி உடன்கட்டை எறுவதுபோல் காட்டப்பட்டுள்ளதால் இது சதிக்கல்

நடுகல்லின் இடதுபுறம் இரண்டு வீரர்கள் இவனோடு போரிடுவது காட்டப்பட்டுள்ளது.
 வீரமரணம் அடைந்த இவன் தேவ கன்னியரால் சொர்கத்துக்கு செல்வது காட்டப்பட்டுள்ளது.



 தகடூர் நாட்டு எயிநாட்டுநாட்டுக்காமுண்டன் அதை... பாபேழையந் வீரன் நக்குடியாந் ராஜேந்திரசோழ காமுண்டன் எயிநாட்டு மிரோவப்பள்ளி திருப்பேறு எறிந்து மாடு நிலத்துவை பங்கள நாட்டு ஆச்சாடி உள்ளிட்ட மாடப்பியரை கொள்ள மாடு மீட்டு போரில் இறந்தவர். 


ராஜேந்திர சோழனுடைய 24 வது ஆட்சி ஆண்டில் (கி.பி.1036)  ராசேந்திர சோழ கமுண்டான் என்ற வீரன் தன் நாடான எயில்(கிருஷ்ணகிரி) நாட்டின் மீது பங்கள நாட்டவர் படைக்கொண்டு வந்து ஆநிரைகளை கவர்ந்து சென்றதை மீட்கும் போரில்  உயிர் துறந்தார் என்று  கல்வெட்டு கூறுகிறது.




“சோழதேவர்க்கு யாண்டு இருபத்து னாலா
வது நிகரிலி சோழ மண்டலத்து தகடூர் னா
ட்டு எயிநாட்டுனாட்டுக் கமுண்டத் அ
தீப்(பால) பெழையந் வீரன் நக்குடியாந்
இராஜே சோழ கமுண்டான் எயிநாட்டு
மி(ரோ)வப்பள்ளி திருப்பேறு ஏறி மாடு நிலத்துவை
பங்கள நாட்டு ஆச்சாடி உள்ளிட்ட மாடப்பியரை
கொள்ள மாடு மீட்டு ஊரழிய பட்டார்”


கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காவரம்  ஊரின் வடமேற்கு பக்கமுள்ள  திரு. மாதையன்  நிலத்தில் உள்ள நடுகல்

எங்களால் இயன்றது . நன்றி 
தலைவர் - நாராயணமூர்த்தி-  9442276076

செயலர் டேவீஸ்                               -9487723678

பொருளர் விஜயகுமார்              --9488830969
ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்செல்வன்                                 -9787536970
தங்கள் பகுதியில் ஏதாவது கல்வெட்டுகள் மற்றும் நடுகற்கள் பழைமையான கோவில்கள் இருப்பின் எங்களுக்கு தெவியுங்கள் நம் கிருஷ்ணகிரி வரலாற்றினை மீட்டெடுக்க வசதியாக இருக்கும்.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
இது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி வட்டாரக்கிளையின் ஜே.எஸ்.ஆர் கிருஷ்ணாஜி கல்வி அறக்கட்டளை நடத்துவதாகும் 

அங்கனப்பற்று - மகராசகடை - பாறை ஓவியம் -பணரத்து பண்டா- - MAHARAJAKADI -PANAMARATHUPANDA PREHISTORIC ROCK ART ( PAINTING ) புதிய கண்டறிதல்

மேலும் சிறப்பு பெறும் மகராசகடை ( அங்கனப்பற்று )பகுதி - நடன பாறை ஓவியம் -மகராசகடை மலை அடிவாரப்பகுதியில் உள்ள பனமரத்துபண்டா என்ற இடத்தில் ...