சிவாலையத்தின் வடக்கு பக்கம்
மல்லப்பாடி மகாதேவன் (sivan ) ஆலையம் (700-1000 years old )

சிவாலையத்தின் கிழக்கு பகுதி
சிவாலையத்தின் தெற்கு பகுதி
சிவாலையத்தின் மேற்கு பகுதி
இடிந்து விட்ட கர்பகிரகம்
கோவிலில் இருந்த விநாயகர் அரசமரத்தடியில்
சிவலிங்கம்விநாயகருக்கு அருகே வைத்துள்ளார்கள்
நந்தி விளக்கு சிவலிங்ம்
இது சோழர் காலத்தியதாக இருக்கலாம் கல்வெட்டுகள் படிஎடுக்கப்பட்டுள்ளன அவற்றின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்
கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன
அன்புடன் தமிழ்
நூற்றாண்டு
மல்லப்பாடி என்ற மலைப்பாடியின் சிறப்பு ஊரின் நடுவே உள்ள 13 நூற்றாண்டைச் சேர்ந்த ஒய்சாளர் பாணியில் கட்டப்பட்ட கருங்கல்லால் ஆன சிவன் கோவில்
மல்லப்பாடி ஊரின் நடுவே உள்ள சிவன் கோயில் உள்ளது இது கி.பி.13ம் நூற்றாண்டு நமது பகுதியை ஆண்ட ஒய்சாள மன்னர் வீரவள்ளலன் காலத்தில் கட்டப்பட்டது . இதற்கு ஆதாரம் அந்த கோவிலின் அதிட்டானத்தின் பட்டிகையில் உள்ளது. ஒரே வரியாக மேற்கு பக்க முகமண்டபத்தில் தொடங்கி கருவறை மற்றும் முகமண்டபத்தை சுற்றி வெட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு கீலங்கரை பற்றின் (தாலுகா போல )காமத்துநல்லூரான் அனுவன் என்பவன் ராசராச கற்கட மகாராசன் தலைவனாய் இருந்தபோது தேவதானம் அளித்ததை தெரிவிக்கிறது.
மற்றோர் கல்வெட்டு அதே கோவிலின் கோயில் கிழக்கு பக்க முகமண்டப அதிட்டானத்தின் பட்டிகையில் உள்ளது. இக்கோயிலுக்கு 1 கண்டக நிலம் தானமளிக்கப்பட்டதை கூறுகிறது.இதில் தான் 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஊரின் பெயர் மலைப்பாடி என்று வருகிறது. அதேப்போல சிவனின் பெயர் சிவனீசுவரமுடையார் என்றும் தெரிகிறது.
முன்றாவது கல்வெட்டு கோயில் அதிட்டானத்தின் பட்டிகையில் உள்ளது. ஒரே வரியாக மேற்கு பக்க முகமண்டபத்தில் தொடங்கி கருவறை மற்றும் முகமண்டபத்தை சுற்றி வெட்டப்பட்டுள்ளது.: வள்ளாலதேவரின் குமாரர்கள் சிங்கைய தெண்ணாயக்கர் மற்றம் வல்லப தெண்ணாயக்கர் ஆகியோர் இக்கோயிலுக்கு புளியாண்டப்பள்ளியை தேவதானமாக அளித்த செய்தியை தெரிவிக்கிறது
இப்படிப்பட்ட இந்த ஊருக்கு காரணமான இந்த சிவன்கோவிலை சரிசெய்து
வழிபாட்டுக்கு எடுத்து வந்தால் ஊர் மேலும் சிறப்படையும்
என்றும் அன்புடன்
தமிழ்செல்வன்
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு
கிருஷ்ணகிரி 9787536970
No comments:
Post a Comment